எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர் என்ற புள்ளிவிவரம் அனைவரையும் பெருமிதம் அடையச் செய்கிறது. நமது இளைஞர்கள் அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துணிவு ஆகியவற்றை ஒருங்கே பெற்று எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமை பொருந்தியவர்கள் ஆவர்.

ஆனாலும், இளைஞர்களை பீடித்துள்ள நோய்களான கிரிக்கெட், சினிமா, சின்னத்திரை, செல்போன் மற்றும் முகநூல், இன்டர்நெட், வாட்ஸ் அப், யுடியூப் ஆகியவற்றில் இளைஞர்களும், மாணவர்களும் தங்களது பொன்னான நேரத்தையும், காலத்தையும் வீணாகத் தொலைத்துவிட்டு கால்போன போக்கில் திசைமாறிச் சென்று செய்வதறியாது விழிபிதுங்கி நிற்பது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய அவலநிலையில் சூதாட்டத்தை சட்டபூர்வ மானதாக ஆக்கலாம் என மத்திய அரசுக்கு தேசிய சட்ட ஆணையம் அண்மையில் பரிந்துரை செய்திருப்பது இளைஞர்களின் சிந்தனையை, செயலை, உறுதியை மேலும் மழுங்கடிக்கச் செய்து அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கக்கூடிய பேராபத்து நிறைந்திருப்பதாக சமூகநீதிச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வளமான எதிர்காலத்தில்தான் வீட்டின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது என்பதை நன்குணர்ந்த நமது இன மீட்பாளரான தந்தை பெரியார் அவர்கள் கல்வி வேலை வாய்ப்பில் சமூகநீதியை நிலைநாட்டிட வேண்டும் என்பதற்காக அல்லும் - பகலும் அயராது, கண்துஞ்சாது, பசிநோக்காது, தனது இறுதி மூச்சு அடங்கும் வரை (தன்னலமின்றி) பாடுபட்டவர் - பகுத்தறிவுப் பகலவன் பெரியார். அதன் பயனாய் ஏழை - எளிய கிராமப்புற மாண வர்கள் கல்வி வேலை வாய்ப்பை இப்போதுதான் எட்டிப் பிடித்துள்ளனர். ஆனால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத இன எதிரிகள் திட்டமிட்டே குறுக்கு வழியில் சென்று சமூகநீதியை ஒழிக்க - அழிக்க முற்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன உணர்வாளர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி, ஜாதி - மத பேதமின்றி அணி அணியாக அணி வகுத்து நின்று சூதாட்டத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதால் ஏற்படும் கேடுகளை மக்களிடையே எடுத் துக்கூறி அவர்களிடையே போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும் உண்டாக்க ஆயத்தமாகி வரு கின்றனர்.

எனவே, மத்திய - மாநில அரசுகள் இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சூதாட்டங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்' வழங்கக்கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் கனிவான வேண்டுகோளாகும்.

- சீ.இலட்சுமிபதி

தாம்பரம், சென்னை-45


இலக்குவனார்பற்றி ஆசிரியர் கட்டுரை வெகு சிறப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய தமிழ்ப் போராளி இலக்குவனார் பற்றிய கட்டுரை இலக்குவனாரின் தமிழ் உணர்வு, இன உணர்வு மற்றும் பெரியார் வழி சுயமரியாதைக்காரர் எனும் தன்மான உணர்வின் வீர வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது - கடல் அளவு நீரின் சுவையைக் கையளவு நீரில் காட்டுவது போல. இதன் காரணமாக - பதவிகளில் பந்தாடப்பட்டு, பதவி இழந்து, சிறைச்சாலை புகுந்து தனது வாழ்க்கைப் பயணத்தையே ஒரு போர்க்களமாக மாற்றிக் கொண்ட தமிழ்ப்போராளி இலக்குவனாரின் மாண வர்களே கலைஞர் கருணாநிதி, ஆர். நல்லக்கண்ணு என்று அறியும் போது வியப்பும், பெருமிதமும் ஏற்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் இவரின் தியாகம் ஒரு மைல் கல் எனலாம்.

- புலவர் கண்மதியன்,

சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner