எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தாமதம்
தமிழக அதிகாரிகள் தகவல்

ஊத்துக்கோட்டை, ஜன.2 கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம். சி.யும் மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. வினாடிக்கு 1700 கனஅடிவீதம் டிசம்பர் 11ஆம் தேதி வரை ஒரு டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

இதற்கிடையே வார்தா புயல் காரணமாக டிசம்பர் 11-ஆம் தேதி இரவு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத் தப்பட்டது. இதனால் கிருஷ்ணா நதி கால்வாய் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படு கிறது.

பருவ மழையும் பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரி களில் அவற்றின் கொள்ளளவில் 15 சதவீதம் தண்ணீர் மட்டும் தான் இருப்பு உள்ளது.

இந்த தண்ணீரைகொண்டு 2 மாதங்கள் வரை மட்டும் தான் சென்னையில் குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.

இதனை கருத்தில் கொண்டு மீஞ்சூர், நெமிலி பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு சென்னையில் தற் போது ஓர் அளவு பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வினியோ கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கண்ட லேறு அணையில் இருந்து பூண்டிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விட கோரி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் டிசம் பர் 20ஆம் தேதி கடிதம் எழு தினர்.

இந்த கடிதத்துக்கு இன்னும் பதில் கடிதம் வந்து சேராததால் தண்ணீர் திறப்பு மேலும் தாமதமாகும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவ ரப்படி பூண்டி ஏரியில் நீர் மட் டம் 23. 30 அடியாக பதிவானது. 617 மில்லியன் கனஅடி தண் ணீர் இருப்பு உள்ளது.

பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப் படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner