எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆக உயர்வு


சென்னை, ஜன.3 தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், நேற்று ஒரே நாளில் 10 விவசாயிகள் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் பலியான விவ சாயிகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந் துள்ளது.

பயிர்கள் கருகியதால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட் டும் 4 பேர் பலியாகி விட்டனர். இது வரை 74ஆக இருந்த விவசாயிகள் சாவு எண்ணிக்கை ஒரே நாளில் 10 பேர் இறந்ததால் 84 ஆக உயர்ந்தது.

பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதைப்பார்த்து மனம் உடைந்து தற் கொலை செய்து கொண்டும், மார டைப்பு ஏற்பட்டும் விவசாயிகள் இறக் கின்றனர். ஏற்கனவே 74 பேர் பலியாகி உள்ள நிலையில் மேலும் 10 பேர் இறந் துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வே ளூர் அடுத்த திருக்குவளை அருகே கீழநாட்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (53). தனது 3 ஏக்கர் நிலத்தில் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கருக தொடங்கியதை பார்த்து மன உளைச்சலுக்கு உள்ளான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழ்வேளூர் அடுத்த வெண்மணி அருகே மேல காவாலக் குடியை சேர்ந்த விவசாயி தம்புசாமி (57). தான் 2 ஏக்கர் நிலத்தில் விதைப்பு செய்திருந்த சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதை கண்டு இவர், நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே விழுந்து இறந் தார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல் லூர் பாண்டுகுடியை சேர்ந்த விவசாயி உத்திராபதி(75). இவர் அப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்திருந்தார். நேற்று காலை வயலுக்கு சென்ற உத்திராபதி தண்ணீரின்றி கருகிய பயிரை பார்த்து மனவேதனையடைந்தார். வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள புத்தகளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வடமலை (85). தனக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீ ரின்றி கருகியதை பார்த்து மனவேதனை யில்  நேற்று முன்தினம் நள்ளிரவு  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.இலந்தைகுளம் பஞ்சாயத்து, வாகை குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகர்சாமி(62). இவர் தனது இரண் டரை ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டி ருந்தார். வயலுக்கு சென்றவர், கருகிய பயிர்களை கண்டு நெஞ்சுவலி ஏற்பட்டு வயலிலேயே மயங்கி விழுந்தார். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இறந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, லெப் பைக் குடிகாடு அருகேயுள்ள எஸ்.ஆடு துறை கிராமத்தைச் சேர்ந்த செம்மலை மனைவி விசாலாட்சி (62). இவர் தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, தெரமலை கிராமத் தில் ஒருஏக்கர் நிலத்தில் பருத்தி சாகு படி செய்தார். நேற்று மதியம் 2 மணிக்கு தனது வயலுக்குச் சென்றார். அங்கு  பருத்திச் செடிகள் காய்ந்து கிடந் ததைக் கண்டு அதிர்ச்சியில் வயலி லேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப் பத்தை சேர்ந்த விவசாயி மண்ணு(55), தனது 6 ஏக்கர் நிலத்தில் கரும்பு, நிலக் கடலை, உளுந்து பயிர் செய்திருந்தார்.  6 ஏக்கர் பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்தது. நேற்று காலை நிலத்துக்கு சென்ற அவர் காய்ந்த பயிர்களை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மண்ணு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கட லூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுகா அழங்காத்தான் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தமிழன்(62), தனது 6 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். நீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று மாலை வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர் நெஞ்சுவலிப்பதாக கூறினார்.

அவரது மகன் மோகநாதன் மற்றும் உறவினர்கள் அவரை காட்டு மன்னார் கோயில் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். செல் லும் வழியிலேயே அவர்  மாரடைப்பால் இறந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தேவதானம் பேட்டையைச் சேர்ந்த விவசாயி முருகன் என்கிற விஜயராகவன்(50). அதே ஊரில் உள்ள தில்லைராசன் என்பவரது மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் செய்து வந்தார். நேற்று காலை நிலத்திற்கு சென்று பார்த்த போது தண்ணீர் இல் லாமல் காய்ந்து போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்கு வந்து மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து முருகனின் மனைவி பவுனு அளித்த புகாரின்பேரில் சத்திய மங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இறந்த போன விவசாயிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நாகனேந் தலை சேர்ந்தவர் அர்ச்சுனன் (70). இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் ரூ.1 லட்சம் செலவழித்து நெல் பயிரிட்டு இருந்தார். போதிய  மழை இல்லாததால் நெற்பயிர்கள் வாடின. நேற்று முன்தினம் இதனை கண்டு மனவேதனை அடைந்த அர்ச்சுனன், நள்ளிரவில் திடீரென மரணம் அடைந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் களுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் கருகிய பயிரை பார்த்து தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner