எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.3- 2016-ஆம் ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி. துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 4) முதல் அசல், ஒருங் கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின் றன.

இதுதொடர்பாக அரசுத் தேர் வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் மேலும் கூறியிருப்பதாவது:

தேர்வர்களுக்கு நவம்பர் 3-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப் பெண் சான்றிதழை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டது.

இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு மார்ச், ஜூன் பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் செப்டம்பர்-அக்டோபர் துணைத் தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர் களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இதர தேர்வர்களுக்கு செப் டம்பர்-அக்டோபர் பருவத்தில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். இந்தச் சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 4) காலை 10 மணி முதல் தேர்வர்கள் தாங்கள் தேர் வெழுதிய தேர்வு மய்யத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner