எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், ஜன.3 பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக்கில் நடை பெற்ற மாநில அளவிலான பெரியார் தொழில்நுட்பக் கருத் தரங்கு 29.12.2016 அன்று காலை 10 மணியளவில் பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் வளாகத் தில் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பாலிடெக்னிக்களிலிருந்தும் மார் 150 மாணவர்கள் கலந்துக் கொண்டு தயாரித்து அனுப்பிய 148 தொழில்நுட்பக் கட்டுரைகளி லிருந்து 75 கட்டுரைகள் கருத் தரங்கில் வாசித்தளிக்க தேர்ந் தெடுக்கப்பட்டன.

காலை 10 மணியிளவில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட 4 துறைகளில் கட்டு ரைகளை மாணவர்கள் வாசித் தளித்தனர்.

அன்று பிற்பகல் 3 மணியள வில் நடைபெற்ற கருத்தரங்கு நிறைவு விழாவில் தலைமையுரை யாற்றிய இக்கல்லூரி முதல்வர் டாக்டர். இரா.மல்லிகா இந்த கருத்தரங்கு மாணவர்களின் திறன்களைப் பகிர்ந்துக் கொள் ளும் இடமாகவும், மாணவர் களின் திறன்கள வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்று கூறினார்.

விழாவில் தலைமை விருந்தி னராகக் கலந்து கொண்டு நிறைவு ரையாற்றிய பொறியாளர்  பி.ஆனந்தன் (தலைவர், இந்திய பொறியாளர் கூட்டமைப்பு, தஞ்சாவூர்) அவர்கள்,  இதுபோன்ற கல்லூரிகளிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, திறன்களை வளர்த்து ஊழலற்ற ஒரு சமுதாயத்தை மாணவர்கள் உருவாக்க வேண் டும் என்று கூறினார்.

விழாவில் முன்னதாக இப் பாலிடெக்னிக் கல்லூரி முதன் மையர் டாக்டர் அ.ஹேமலதா வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் கட்டுரை வாசித்தளித்த மாணவர்களுக்கு முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிகளோடு ரூ. 1500, ரூ. 1000 மற்றும் ரூ. 750 ஆகிய பணப்பரிசுகள் வழங்கப் பட்டன.  இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  மேலும் இக் கருத்தரங்கின் விழா மலர் குறுந்தகடு தலைமை விருந்தினர் பி.ஆனந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.

இக்கல்லூரி துணைமுதல்வர் டாக்டர் உ.பர்வீன் இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இக்கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் ப.உஷாராணி நன்றி யுரையாற்ற விழா இனிதே நிறை வுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner