எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வறட்சி பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடப்பதை உத்தரவாதப்படுத்துக!
தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

சென்னை, ஜன. 4-- வறட்சி பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு முழுமையாக நடைபெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை துவக்க வேண்டுமென்று வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 28-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலா ளர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து டிசம்பர் 30ஆம் தேதி நான்கு தமிழக அமைச் சர்களுடன் சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதன் அடிப்படை யில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து முதலமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஜனவரி 10ஆம் தேதிக்குள் வறட்சி பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென்று காலவரை யறை தீர்மானிக்கப்பட்டுள்ளது. வறட்சி பாதிப்பு குறித்து கணக் கெடுப்பு முழுமையாக நடை பெறுவதை அரசு உத்தரவாதப் படுத்த வேண்டும்.

தற்கொலை மற்றும் அதிர்ச் சியால் மரணமடைந்த விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை யும் இந்தக்குழு மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.வறட்சி பாதிப் புக்கு உரிய நிவாரணம் அளிக் கப்பட வேண்டுமென்றும், விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல மைச்சர் உத்தரவாதம் அளித்து உள்ளார்.

இந்த நிலையில் விவசாயிகள் தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் நம்பிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறிள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner