எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

முத்துப்பேட்டை, ஜன.5 பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகிய வேதனையில் நேற்று 10 விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். இதோடு இறந்த விவசாயிகளின் எண் ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும்  பொய்த்து போனதால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறு, அணை, ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் தண்ணீரின்றி விவசாய பயிர்கள் கருகியும், அழிந்தும் வருகிறது. மேட்டூரில் இருந்து காவிரி யில் போதுமான அளவு நீர் திறக்கப் படாததால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இத னால் கவலையடைந்த விவசாயிகள் தற்கொலை செய்தும், மாரடைப்பு ஏற் பட்டும் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதுவரை 96 விவசாயிகள் இறந்த நிலையில் நேற்று மேலும் 10 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம்: முத்துப் பேட்டை அருகே  குன்னலூர் ஊராட்சிக் குட்பட்ட தர்காஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன்(65), தனது  ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார். நேற்று முன் தினம் மாலை வயலுக்கு சென்றபோது தண்ணீரின்றி பயிர்கள் கருகி இருந்தது. அதைக்கண்டு மனவேதனையோடு வீடு திரும்பிய அவர் இரவு தூங்கச்சென்றார். நேற்று காலை உறவினர்கள் எழுந்து பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சவுந்தரராஜன் படுக்கையிலேயே இறந்து கிடந்தார்.

நாகை மாவட்டம்: வேதாரண்யம் தாலுகாவிற்குட்பட்ட வாட்டாக்குடியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது தாயார் சேது அம்மாள்(73). கணவர் இளங்கோவன் இறந்த பின் மகனுடன் வசித்து வந்தார். சேது அம்மாள், தலைஞாயிறில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் மகன் செய்திருந்த சம்பா  சாகுபடியை நேற்று பார்க்க சென்றார். நீரின்றி பயிர்கள் கருகியதை பார்த்துவிட்டு   வீட்டுக்கு வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு  இறந்தார்.

தஞ்சை மாவட்டம்: பட்டுக் கோட்டை அடுத்த  ஆலத்தூரை  சேர்ந்த வர் பொன்னுச்சாமி(66). இவர், அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் குத்தகை எடுத்து ரூ.1லட்சம் கடன் வாங்கி  நெல்  மற்றும் உளுந்து பயிரிட்டிருந்தார். நேற்று பிற்பகல் 12   மணியளவில் வய லுக்கு சென்ற பொன்னுச்சாமி தண்ணீ ரின்றி பயிர் கருகியதை பார்த்து   வாங் கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்ற மனவேதனையில் இருந்தார்.  அப்போது  அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

புதுக்கோட்டை  மாவட்டம்: ஆலங் குடி அருகே  பசுவயல் பகுதியை சேர்ந்த  விவசாயி குப்பமுத்து (65), நேற்று  பாலையூரில் உள்ள தனது வயலுக்கு சென்றபோது  கருகிய சம்பா பயிர்களை பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு அங் கேயே மயங்கி  விழுந்து இறந்தார்.

அரியலூர் மாவட்டம்: திருமானூர் அடுத்த விழுப்பனங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன்(65), தனது வயலில் மக்காச்சோளம் பயிரிட் டிருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் வாடி யதால் கடந்த சில நாட்களாக கோவிந் தன் மனஉளைச்சலில் இருந்து வந்தார். நேற்று வாடிய  மக்காச்சோளப்பயிர் களை  பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே மயங்கி  விழுந்து இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட கொளத்தூரை  சேர்ந்த விவசாயி சின்னதுரை(52), தன் னுடைய ஒரு ஏக்கரிலும், குத்தகைக்கு எடுத்த ஒரு  ஏக்கரிலும் நெற்பயிர் சாகு படி செய்திருந்தார். போதிய தண்ணீர் கிடைக்காததால்  நெல் பயிர் கருகிய நிலையில் மீண்டும் உளுந்து பயிர் செய் துள்ளார். தண்ணீர் முற்றிலும் கிடைக் காததால் உளுந்து பயிரும் கருகியது இதனால் நஷ்டத்திற்கு ஆளாகி  மன வேதனை அடைந்த அவர், நேற்று வய லுக்கு சென்று கருகிய பயிரை பார்த்து அங்கேயே மயங்கி விழுந்து இறந் துள்ளார்.

கடலூர் மாவட்டம்: திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் கணக்கன் குப் பத்தை சேர்ந்த விவசாயி முருகன்(55), நேற்று காலை வயலுக்கு  சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தபோது முருகன், தண்ணீரின்றி கருகிய பயிரைக்கண்டு மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

ராமநாதபுரம் மாவட்டம்: தொண்டி அருகே  பரமணிவயலை சேர்ந்த விவ சாயி ஆறுமுகம்(65), தனது 3 ஏக்கர்  நிலத்தில் நெல் நடவு செய்து இருந்தார். போதிய மழையில்லாததால் பயிர்கள்  கருகின. இதனால் மனமுடைந்து காணப் பட்ட ஆறுமுகம் நேற்று வயலில் திடீ ரென  மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை தேவகோட்டையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு முகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்: கொத்த மங்கலத்தை சேர்ந்த விவசாயி வளர்மதி (52), தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தார். நேற்று வயலுக்கு சென்றபோது நீரின்றி பயிர் காய்ந்திருந்ததைக்கண்டு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார்.

கரூர் மாவட்டம்: மகாதானபுரம் வடக்கு தீர்த்தம் பாளையத்தை சேர்ந்த விவசாயி  பாரதிதாசன்(48), 2.5 ஏக்கர்  நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் காயத் தொடங்கி யதால் மாரடைப்பு  ஏற்பட்டு இறந்தார்.

நேற்று முன்தினம் வரை 96 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் 10 விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து உள்ளனர். இதனால் விவசாயிகளின் பலி எண்ணிக்கை 100அய் தாண்டியது. இதுவரை விவசாயிகள் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner