எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஜன.5 கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், 40வது சென்னை புத்தகக் கண்காட்சி, நாளை மாலை துவங்குகிறது.

கடந்த, 39 ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி, 'பபாசி' எனும், தென் னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில், பிரம்மாண்டமான புத் தகக் கண்காட்சி, சென்னையில் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு, 40ஆவது புத்தக கண்காட்சி, சென்னை, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், நாளை துவங்கி, வரும், 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வார நாட்களில், மதியம், 2:00 மணிக்கும், விடுமுறை நாட் களில், காலை, 11:00 மணிக் கும் துவங்கும் கண்காட்சி, இரவு 9:00 மணி வரை நடைபெறும்.

இதற்காக, 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஆங்கில நூல்களுக்காக, 151 அரங்குகளும், மலையாள நூல் களுக்காக, இரண்டு அரங்குகளும், மற்றவை தமிழ் நூல்களுக்காகவும் ஒதுக்கப்பட் டுள்ளன.

இக்கண்காட்சியில், 350 பதிப்பாளர்களும், 100க்கும் மேற் பட்ட விற்பனையாளர்களும், நேரடியாக பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு விற்பனையான, 15 கோடி ரூபாயை விட, கூடுதலாக, 5 கோடி ரூபாய்க்கு புத்தகங்களை விற்க, பபாசி இலக்கு நிர்ணயித்துள்ளது.

புத்தக கண்காட்சிக்கு, 10 ரூபாய்க்கான நுழைவு டிக்கெட் டுகளை பெற வேண்டும்.

இலவச டிக்கெட்டுகள் 10 லட்சம் பள்ளி மாணவர்களும், இலவச டிக்கெட்டுகளுடன், 250 ரூபாய்க்கான சலுகையை, எம்.ஜி.எம்.டி.சி., வேல்டு நிறுவனம் வழங்குகிறது.

புத்தக கண்காட்சி நடை பெறும், 14 நாட்களும், மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பல துறை வல்லுனர்கள் பங்கேற் கும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள், மாணவர்களுக் கான போட்டிகள், குறும்பட போட்டிகள் நடைபெறும்.

செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், 4,000 கார்களும், அதற்கு மேற் பட்ட இருசக்கர வாகனங் களும் நிறுத்த, இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

கூடுதலாக வரும் வாக னங்கள், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏற்படும் வாகன நெரி சலை கட்டுப்படுத்த, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள நுழைவாயில் வழியாக நுழைந்து, புது ஆவடி சாலை யில் உள்ள, சங்கர் தெருவின் வழியாக, வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.ஓ. எஸ்., மிஷின்கள் தற் போது, மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர் வதால், அதிகமான ரொக்கத் திற்கு, புத்தகங்கள் வாங்க முடியாது என்பதால், அனைத்து அரங்கு களிலும், பி.ஓ.எஸ்., என்னும், 'ஸ்வைப் மிஷின்'கள் பயன்படுத்தப்பட உள்ளன.

'பபாசி'யின் சார்பில், 50 மிஷின்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மேலும், அரங்கு களில் ஏற்படும் சில்லறைத் தட்டுப்பாட்டை நீக்க, 2,000 - 500 ரூபாய்க்கு, 100, 50 ரூபாய்க் கான டோக்கன்களை, வாசகர் களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'பபாசி' செயலி

சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம்பெறும் அரங்குகளின் விவரங்கள், நிகழ்வுகள் குறித்த செய்திகளை அறிய, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள, 'பபாசி' என்ற செய லியை தரவிறக்கம் செய்யலாம். 'பபாசி' செயலி பதிவாளர்கள், 200 ரூபாய், சலுகைச் சீட்டு பெற்று, நால்வரும்; 100 ரூபாய் சலுகைச் சீட்டு பெற்று, இரு வரும், 14 நாட்களுக்கும், கண் காட்சிக்கு சென்று வர முடியும்.

இக்கண்காட்சியில் 187,188,221,222 எண்ணுள்ள அரங்குகளில் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் கிடைக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner