எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை நூற்றாண்டு:
31ஆவது தேசிய தேகுவாண்டோ போட்டிகள்

காஞ்சிபுரம், ஜன.6 காஞ்சிபுரத்தில், சீரிய பகுத்தறிவாளராக வாழ்ந்த முன்னாள் அமைச்சர்,  செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டையொட்டி, 31ஆவது தேசிய அளவிலான தேகு வாண் டோ போட்டிகள் 2016  டிசம்பர் 27, 28 & 29 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத் தில் நடைபெற்றது.

தமிழ்நாடு, ஆந்திரா, கருநாட கா, கேரளா,  புதுச்சேரி , மகாராஷ் டிரா, ஒடிசா, தெலுங்கானா,  சட் டிஸ்கர், மேற்கு வங்காளம், உத் தரபிர தேசம்,  டில்லி  ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 300 போட்டி யாளர்களும் பயிற்றுனர் களும்  27.12.2016 அன்று காஞ்சிபுரம் வந்தனர்.

தற்காப்புக்கலை விழிப்பு ணர்வுப் பேரணி     28.12.2016 அன்று காலை 8.30 மணியளவில் அறிஞர் அண்ணா பயின்ற பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தற்காப்புக்கலை விழிப்புணர்வுப் பேரணியை சின்னகாஞ்சிபுரம் காவல்நிலைய ஆய்வாளர் இலட்சுமிபதி அவர் கள் தொடங்கி வைத்தார். 9.00 மணியளவில் பேரணி போட் டிகள் நடக்கும் அண்ணா அரங் கை அடைந்தது.

தொடக்கவிழா - வி.அய்.டி வேந்தர் பங்கேற்பு   தொடக்கவிழா  9.30 மணியளவில் தேகுவாண்டோ சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரும் சி.வி.எம் அவர்களின் புதல்வருமான சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ சங்கத்தின் செயலாளர் முனைவர் பா. கதிரவன் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சரும் வி.அய்.டி பல்கலைக்கழக வேந்தரு மான முனைவர் ஜி. விசுவநாதன் அவர்கள் சி.வி.எம் அவர்களின் சிறப்புகள் குறித்தும் திராவிட இயக்கத் தொடர்பு குறித்தும் உரையாற்றி 31வது  தேசிய தேகுவாண்டோ போட்டிகளைத் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பகுத்தறிவாளரும் சி.வி. எம்.அண்ணாமலை அவர்களின் பேரனுமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் தலை மையில் நடைபெற்றது. அவர்தம் உரையில் தேகுவாண்டோகலை உடலையும் மனதையும் பக்குவப் படுத்தி தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்று குறிப்பிட்டார். மருத்துவர்கள் பி.டி. சரவணன் , அன்புச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு உடற்பயிற்சி அவசியம் என்றும் தேகு வாண்டோ போன்ற தற்காப்புக் கலை தன்னம்பிக்கை யை விதைத்து  எதையும் தாங்கும் மனப்பான்மையை வளர்க்கின் றன என்று குறிப்பிட்டனர்.

நாற்பதுக்கு மேற்பட்ட தங்கப் தங்கப்பதக்கங்களைக் குவித்து  ஏழாவது முறையாக தமிழக அணியினர் ஒட்டுமொத்தக் கோப் பையை வென்று சாதனை படைத் துள்ளனர்.

ஆந்திரம் இரண்டாம் இடத் தையும் ஒடிசா மூன்றாம் இடத் தையும் பிடித்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner