எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை!

சென்னை, ஜன. 7- தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. எதிர்பார்த்தபடி தீவிரமடைய வில்லை.

இதன் காரணமாக, தமிழ கம் முழுவதும் உள்ள பவானி சாகர் அணை, மேட்டூர், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, அமராவதி உட்பட 89 அணை களும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன் றம், வீராணம் உட்பட 14 ஆயி ரம் ஏரிகளும், 30 லட்சம் கிண றுகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

தற்போது தமிழகத்தின் குடி நீர் தேவையைப் பூர்த்தி செய் யும் 194 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் வெறும் 24 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீரைக் கொண்டு தமிழகத்தில் 2 மாதம்கூட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. இதனால், இப்போது முதலே பெரும்பா லான பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வாரியத்திற்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அணை மொத்தமாக வறண்டு விடும் என்பதால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தமிழகத்தில் இந் தாண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் பஞ்சம் இன்னும் இரண்டு மாதத்தில் வர வாய்ப்புள்ளது.

எனவே, இப்பிரச்னையை ஓரளவு சமாளிக்க 900 இடங்க ளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக் கலாம் என அறிக்கை அளித் துள்ளோம். பொதுமக்களிடம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி யும் கூறியுள்ளோம். மேலும், இப்போதிருந்தே குடிநீர் விநி யோகிப்பதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner