எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முழங்கால் மூட்டில் கட்டியை அகற்றி
மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, ஜன.7 சென்னை யைச் சேர்ந்த 49 வயதாகும் லட்சுமி மனோகரின் உடலில் மிகப்பெரிய உயிரணுகட்டி (எலும்புவில் உள்ள ஜிசிடியில் புற்றுநோய் உருவாக்கும் கட்டி போல)இருந்தது மருத்துவப் பரி சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது.

இது அவரது முழங்கால் மூட்டு இணைப்பிற்கு அருகாமை யில் இருந்தது. 16 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு காலின் மேல் உள்ள எலும்பில் ஏற்பட்ட குறை பாட்டிற்குசிகிச்சை எடுத்திருக் கிறார். அதன் தொடர்ச்சியாக அவர் இயல்புநிலைக்கு திரும்பி யுள்ளார். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமை யான மூட்டுவலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில்  பழைய மாமல்லபுரம் சாலையில்  (ஓஎம் ஆர்) உள்ள அப்போலோ (கிஷிபி) மருத்துவமனையில் முதன் மையான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்தகுமார் சுந்தரத்தை சந்தித்துப் பேசினார். அவர்தான் அந்த பெண்ணிற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மூட்டில் ஏற்பட்ட கட்டியை அகற்றியவர்.

அவர் உடல் நிலையை முழு மையாக பரிசோதனை செய்த பின்னர் டாக்டர் நந்தகுமார் சுந்தரம் வழக்கமான மருத்துவ நடைமுறைகளோடு ஒருங்கி ணைந்த நேவிகேஷன் சாதனங் களின் உதவியோடு பொருத்தமான மூட்டுமாற்று அறுவை சிசிக்சை யை அவருக்கு செய்து முடித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்த அடுத்தநாளே நோயாளி எழுந்து நடக்கத் துவங்கினார். இரண்டு நாட்கள் கழித்து மாடிப்படிகளை ஏறிஇறங்கத் துவங்கினார்.அறுவை சிகிச்சை முடிந்த 5ஆவதுநாளில் மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பினார்.

உலகில் நேவிகேஷன் சாதனத் தின் உதவியோடு வழக்கமான மூட்டுமாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner