எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் நீரின் அளவு குறைப்பு

கடலூர், ஜன. 8- கடலூர் மாவட் டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி யின் நீர்மட்டம் குறைந்து வரு வதால் சென்னைக்கு அனுப்பப் படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய நீராதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரி ஆகும். இந்த ஏரியில் இருந்து சிதம்ப ரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் உள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலம் பாசன வசதி பெறு கிறது.

ஏரியின் மொத்த கொள்ள ளவு 47.50 அடியாகும். சென் னைக்கு தண்ணீர் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது.

நீர்வரத்து குறைந்தது

ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தினந்தோ றும் 76 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் கீழணை யில் தண்ணீர் இல்லாததால் ஏரிக்கு நீர் வரத்து இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வறட்சி யின் காரணமாக தற்போது ஏரி யில் 41 அடி தண்ணீரே உள்ளது.

இதன் காரணமாக சென் னைக்கு நொடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப் படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய பாசனத்துக்காக வீரா ணம் ஏரி திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களுக்கு மட்டுமே..

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. ஏரியின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து வரு கிறது. மழையும் பெய்யவில்லை. இதே நிலை நீடித்தால் ஏரியில் இன்னும் 10 நாட்களுக்குத்தான் தண்ணீர் இருக்கும்” என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner