எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 30 தமிழ் நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல் லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன.

அரசு கல்லூரிகளில் உள்ள நூறு சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப் படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங் களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண் டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத் தால் போதும்.

தனியார் கல்லூரிகள் வைத் திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன.

ஒரு லட்சம் மாணவ மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந் தனர். இந்த ஆண்டும் பொறியியல் படிப்பில் சேர மாண வர்கள் ஆர்வம் இன்றி உள்ள னர். அதற்கு காரணம் வேலை வாய்ப்பு குறைவுதான். சாதா ரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனி யார் நிறுவனங்கள் வருவ தில்லை. அதன் காரணமாக பொறியியல் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது.

கலந்தாய்வு மூலம் பொறியியல் கல்லூரிகளில் மாண வர்கள் சேருவது குறித்து அண் ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந் தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2ஆவது வாரத்தில் விண்ணப் பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்2 தேர்வு முடிவு 12ஆம் தேதி வெளியாகிறது. அதன் பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல் கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறி விப்பு விரைவில் வெளியிடப் படுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner