எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 30 மணல் கொள்ளையை தடுக்க பொதுப் பணித்துறையே மணல் கிடங்கு களை ஏற்படுத்தி மணல் விநியோ கத்தை தடங்கலின்றி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நேற்று (29.3.2017) சென்னையில் இச்சங்கத்தின் மாநில தலைவர் மு.திருசங்கு செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

மணல் பொதுப்பணித்துறை மூலமாக விநியோகம் செய்யப் படுகிறது. ரூபாய் 650 க்கு  டிடி எடுத்துக் கொடுத்தால் 2 யூனிட் (200 க.அடி) மணல் வழங்கப்பட வேண்டும். ஆற்றுப் படுகையிலிருந்து மணலை கொண்டு வந்து வெளியில் ஒரு கிடங்கில் கொட்டி அங்கிருந்து மணலை லாரியில் ஏற்றிவிட அரசு தனியார் ஏஜென்சியை நியமித்து அவர்கள் பணம் வசூலிக்கிறார்கள். அதற்கு ரூபாய் 1000 என்று நிர்ணயிக்கப் பட்டது. ஆனால் நடைபெறு வதோ மணல் கொள்ளை

ஒரு லாரிக்கு ரூ.650 டிடி எடுத்துக் கொடுத்துவிட்டு ரூபாய் 5000 ரொக்கமாக அங்கே உள்ள வர்களிடம் தந்தால்தான் ஒரு லோடு மணல் ஏற்றப்படுகிறது. இதற்கு ஒரு லாரி 150 கிமீ பயணித்து ஒரு நாள் காத்திருந்து கொண்டு வரவேண்டியதாகிறது. இதனால் லாரி வாடகை ஒரு டிரிப்புக்கு ரூபாய் 9000 ஆகிறது. ஒரு லோடு மணல் விலை ரூபாய் 15,000- ஆகிறது. இடை தரகர்களால் ஏற்படுத்தபடும் இந்த தேவை யற்ற விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி அரசாங்கமே நேரடியாக பொதுப்பணித்துறை மூலமாக மணல் விற்பனையை செயல் படுத்த வேண்டும்.

மணலுக்கு அரசு நிர்ண யிக்கும் விலையை ஒப்பந்தகாரர் கள் நேரடியாகவோ அல்லது மின் அணு பணபரிமாற்றமாக வோ செலுத்தும் முறையை நடை முறைக்கு கொண்டு வந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொதுப் பணித்துறையே மணல் கிடங்கு களை ஏற்படுத்தி மணல் விநியோ கத்தை தடங்கலின்றி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner