எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 31 சென்னை, அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. எனவே, அஞ்சலக சேவை தொடர்பான குறைகளை வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 5 -ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். இதுதொடர்பான சேவைகளில் குறைகள் ஏதேனும் இருப்பின் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ (அ) மின்அஞ்சல் மூலமாகவோ  ஏப்ரல் 5 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக குறைகளை தெரிவிக்கலாம்.

தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600002 எனும் முகவரிக்கு, குறைதீர் முகாம் எனும் தலைப்பிட்டு, வாடிக்கை யாளர்கள் தங்களது கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 10 - ஆம் தேதி நடைபெறவு குறைதீர் முகாமில் வாடிக்கையாளர்கள் நேரில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner