எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 31 திமுக தலைவர் கலைஞர் சட்டப் பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.

தமிழக அரசியல் வரலாற் றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கலைஞர். இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமிழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.
கரூர் மாவட்டம் குளித் தலை சட்டப்பேரவைத் தொகு தியில் கடந்த 1957-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கலைஞர், முதல் முறையாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1ஆ-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

அவர் சட்டப்பேரவை உறுப் பினராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள் நிறைவடை வதால், இது அவரது சட்டப் பேரவை வைரவிழா ஆண்டாகும்.

1957யி-ல் குளித்தலை, 1962இ-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971இ-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980யி-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-இல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006இ-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-இல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல் களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர் தல்களிலும் வெற்றி பெற்றுள் ளார்.

எம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 1991ஆம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற் றதால், தனது எம்எல்ஏ பதவியை விட்டு விலகினார்.

கடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட் டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டு களுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின்போது 2007ஆ-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன் விழா ஆண்டையொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப் பேரவை பொன்விழா வளைவு அமைக்கப்பட்ட துடன், கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner