எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மதுரை,  மார்ச் 31 மதுரை நகரில் ஏப்ரல் 1 முதல் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஆவணங் கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இருசக்கர வாக னத்தில் தலைக்கவசம் அணிந்து செல்வது 2015 ஜூலை 1 முதல் உயர்நீதிமன்றத்தால் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை நகரில் தலைக்கவசம் அணியாமல் செல்வது அதிகரித்து வருகிறது. 2016-இல் மதுரை நகரில் விபத்துகளில் இறந்தவர்கள் 225 பேர். இதில் 90 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் பயணித்த வர்கள். 2016-இல் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 1 லட்சத்து 34 ஆயிரத்து 954 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இதையடுத்து மதுரை நகரில் ஏப்ரல் 1 முதல் தலைக்கவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட உள்ளிட்ட சட்டப் படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner