எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.1 ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத் தப்பட்டுள்ளது. இதனால், இன்னும் 10 நாள்களில் பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு விடும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர், இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னை குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பூண்டி ஏரி வறண்டது. இதைத்தொடர்ந்து தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் இரண்டு முறை தண்ணீர் திறக்கப்பட்டது.

இருப்பினும், பூண்டி ஏரியில் போதிய அளவு நீர் நிரம்பாததால், இந்த ஆண்டும் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத் தனர்.

அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் தண் ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர், கிருஷ் ணா நதி மூலம் ராய்ப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்திய வேடு வழியாக, 152 கிலோ மீட்டர் தொலைவை கடந்து, தமிழக எல்லை யான தாமரைகுப்பத்துக்கு வர வேண்டும்.

ஆனால், ஆந்திர மாநில விவசாயிகள் கிருஷ்ணா நதியில், வழிநெடு கிலும் மின் மோட்டார் மூலம் தங் களது விவசாய தேவைக்கு முறை கேடாக தண்ணீரை உறிஞ்சிவிட்டனர். இதனால், போதிய அளவு தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரவில்லை.

இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி அன்று கண்டலேறு அணை அடைக் கப்பட்டது. அப்போது, பூண்டி ஏரியில் 580 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. மேலும், இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 380 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை (மார்ச் 30) நிலவரப்படி, 3,231 மில் லியன் கன அடி கொள்ளளவு உள்ள பூண்டி ஏரியில் வெறும் 185 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.

இதில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், இன்னும் 10 நாள்களுக்குள் பூண்டி ஏரி முற்றி லுமாக வறண்டுப் போகும். இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உருவாகி யுள்ளது.

எனவே, தமிழக அரசு இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீரை திறந்து விட வழி வகை செய்ய வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner