எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.1 புளுடன் பொறியியல் பள்ளிகளின் முதல்வர்கள், புதிய மாணவர்களை சேர்ப்பதற்காக இந்தியாவுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 11 வரையில் வருகை தந்துள்ளனர்.

புளுடன் பள்ளிகள் தங்களது வளாகத்தில் படிப்பதற்காக இந்திய மாணவர்களை வரவேற்கிறது. புள்ளி விவர கணக்குளின்படி, அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்புகளை படிக்கும் அதிக மாணவர்கள் சேர்க்கையில் இந்தியா அதிகளவாக 54.6 சதவீதம்

இருக்கிறது. இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் பட்டப்படிப்பு அள விலும், செய்முறை பயிற்சி படிப் பிலும் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து இயந்திரவியல் மற்றும் வானூர்தி பொறியியல் துறை யின் பேராசிரியரும், பட்டப் படிப்பு களுக்கான உதவி முதல்வருமான பாட்ரிக் ஹீலன் கூறுகையில்:-

இந்தியாவைச் சேர்ந்த பட்டப் படிப்பு மாணவர்கள் எங்களது பட்ட மேற்படிப்பு மாணவர்களாக மட்டு மல்லாது, அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சித் திட்டங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மேலும், பி.எச்.டி., போன்ற ஆராய்ச்சி நிலைகளிலும் அவர்களின் பங்கு முக்கியமானது என்றார்.

இந்தியாவில் முகாமிட்டுள்ளவர் களில் புளுடன் பொறியியல் பள்ளி களின் உதவி பேராசிரியர் திருபழவனம் ஜி.கணேஷ் கூறுகையில்:

பல்வேறு வகையான மாணவர் களை எங்களது வளாகத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் பன்முகத் தன்மை வாய்ந்த அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்த அறிவுசார் பன் முகத்தன்மை மூலமாக சர்வதேச அளவில் மிகவும் தேவையாக இருக் கும் தண்ணீர், எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, நீடித்த உட்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சர்வதேச மாணவர்களால் தீர்வு காண முடியும் என்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner