எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி கேட்கும் செய்தியாளர்கள்

தேச விரோதிகளா?

எச்.ராஜாவிற்கு பத்திரிகையாளர்கள்

கடும் கண்டனம் - மன்னிப்பு கேட்க வேண்டும்

சென்னை, ஏப். 2- கேள்வி கேட்கும் செய்தியாளர்களை தேச விரோதிகள் என்று பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) தலைவர் பீர்முகமது, பொதுச் செயலாளர் இரா.மோகன் ஆகியோர் 31.3.2017 அன்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மிக கொச்சையாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் செய்தியாளர்களிடையே பேசியி ருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். “டெல்லியில் 16 நாட்க ளுக்கு மேலாகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை பிரதமர் ஏன் பார்க்கவில்லை? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் ஆட்சியின் போது வெள்ளக்கா ரியை (சோனியா காந்தி) எதிர்த்து ஏன் போராடலை, நீங்க எல்லாம் மோடி எதிரிகள், தேச விரோதிகள் என எச்.ராஜா வசைபாடி உள்ளார்.

மிக ஆபத்தான போக்காகும்

கேள்வி கேட்கும் செய்தியாளர்களை தேச விரோதிகள் என்று கூறுவது மிக ஆபத்தான போக்காகும். பிரதமர் குறித்து கேள்வி கேட்பதோ, பிரதமரின் செயல்களை விமர்சிப்பதோ ஜனநாயகத்துக்கு எதிரான செயல் அல்ல, உண்மையான ஜனநாயகம் என்பது விமர்சனங்களின் அடிப்படையில் அமைந்திருப்பது தான் என்பதை எச்.ராஜா புரிந்துக்கொள்ளாமல் பேசியிருப்பது கருத்து சுதந்திரத் துக்கு எதிரானதாகும். மத்தியில் ஆளும் அரசுக்கு ஊடகங்கள் வளைந்து கொடுக்க வேண்டும் என ராஜா கருதுவதை அவரின் செயல் வெளிப்படுத்துகிறது.

ஊடகவியலாளர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்திப் பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கருத்து சுதந்திரத்தைப் பாதுகாத்திட ஊடகங்ளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும், இதுபோன்ற மிரட்டல் போக்கை எச்.ராஜா கைவிடவேண்டும் என்றும் சென்னைப் பத்திரிகை யாளர் சங்கம் வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவித்துள்ளனர்.


இந்தியா-மலேசியா இடையே 7 ஒப்பந்தங்கள்

 

புதுடில்லி, ஏப். 2- மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 6 நாள் பய ணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்த அவர் தனது முதல் பயணமாக சென்னைக்கு வந்தார்.

சென்னையில் மலேசிய மாணவர்களுடன் கலந்துரையா டினார். நேற்று (1.4.2017) புது டில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமது அன்சாரி ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந் தித்தார். அப்போது மலேசியா-இந்தியா இடையிலான உறவு களை மேம்படுத்துவது உள் ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத் தினர்.

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், விமான சேவை ஒப்பந்தம் உள் ளிட்ட பல்வேறு துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது பேசிய பிரதமர் மோடி, பொருளாதார மேம்பாட்டை வெற்றிகரமாக இணைந்து உருவாக்குவோம் என்று குறிப் பிட்டார்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையே உணவு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner