எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.2 தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு மாற்றாக தமிழர்களால் அதிகம் எதிர்பார்க் கப்பட்ட ஸ்மார்டு கார்டு வழங் கும் திட்டத்தை தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (1.4.2017) தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில், பொதுமக்களுக்கு  நேற்று காலை நடைபெற்ற விழா வில் ஸ்மார்ட் கார்டு வழங்கி, திட்டத்தை தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், இன்னும் 2 மாதங்களில் தமிழ கம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் நிறைவடை யும் என்று கூறினார்.

சரி. ஸ்மார்ட் கார்டு எப்படி இருக்கும், அது எப்படி செயல் படும், அதில் திருத்தம் மேற்கொள் வது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்மார்ட் கார்டின் முன்புறம் குடும்பத் தலைவரின் நிழற்படம் மற்றும் அவரது விவரங்கள் இடம்பெறும். முகவரி, கடை யின் எண் ஆகியவையும் இருக் கும். பின்புறம், குடும்ப உறுப் பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஸ்மார்ட் கார்டில் இருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகு, ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும்.

ஸ்மார்ட் கார்டில் குடும்பத் தலைவரின் மொபைல் எண் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்ய மொபைல் போன் எண்ணை பதிவு செய்திருத்தல் அவசியம்.

ஸ்மார்ட் கார்டில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங் களை ஷ்ஷ்ஷ்.tஸீஜீபீs.ரீஷீஸ் என்ற இணைய தளத்தின் மூலம் செய்து கொள் ளலாம். நேரடியாக இ-சேவை மய்யங்களிலும் திருத்தங்களை செய்யலாம்.

ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி ரேஷன் கடையில் என்ன பொருட் கள் வாங்கினாலும், குடும்பத் தலைவரின் மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி வந்து விடும்.

சென்னை ஆர்.கே.நகரில் ஸ்மார்ட் கார்டு விநியோகம் இப்போதைக்கு செய்யப்படாது. இடைத் தேர்தல் முடிந்ததும் அப்பகுதியில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் வரை, தற்போதிருக்கும் குடும்ப அட்டையைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

பல ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தி வந்த ரேஷன் அட்டைகளின் நிலை கிட்டத்தட்ட பரிதாபத்துக் குரியதாக இருந்தது. அதற்கு தற் போது விடிவுகாலம் பிறந்துள் ளது என்று பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner