எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.25  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தி மொழியை எந்தெந்த வகையில் கூடுதலாக பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழு 2011ஆம் ஆண்டு பல்வேறு பரிந்துரை களை தந்துள்ளது. 117 பரிந் துரைகளில் பெரும்பாலான வற்றை ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் அறிவித் துள்ளார். குடியரசு தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அர சின் ஒப்புதலேயன்றி வேறல்ல.

எந்தவொரு மொழியையும் நிர்ப்பந்தமாக திணிப்பது எதிர் மறையான விளைவுகளையே உருவாக்கும் என்பதை மத்திய அரசு மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  மோடி அரசின் இந்த நடவடிக்கை இன்னொரு மொழிப் போருக்கு வழிகோலுவதாகவே உள்ளது.

மனித குலத்தின் அறிவியல் பூர்வமான வளர்ச்சிக்கு தாய் மொழிக் கல்வி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இந்தியை கட்டாயப் படுத்துவது தாய்மொழி வழிக் கல்வியை புறக்கணிக்கவே இட்டுச் செல்லும்.

கடந்த காலங்களில் இந்தியை பிற மொழி பேசும் மாநில மக்க ளிடம் திணிக்க முயன்றபோது மொழிப்போர் மூண்டது. அத் தகைய சூழ்நிலையை மத்திய அரசு மீண்டும் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner