எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஏப்.25 முதுகலை படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து, தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் சார்பில்    நடந்த போராட்டத்துக்கு தமி ழக காங்கிரஸ் கட்சியின் தலை வர் திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார். முதுகலை படிப்பிற்கான இட ஒதுக் கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வழியுறுத்தி, 6ஆவது நாளாக தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ் நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் போராட்டத் துக்கு நேற்று ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிரஞ்சீவி, முன்னாள் எம்பி விஸ்வநாதன், இதயத் துல்லா, தாமேதரன், துறை முகம் ரவிராஜ், ரஞ்சன் குமார், சசிகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மருத்துவ பட்டமேற்படிப் பில் 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. இப்போது உயர் நீதிமன்ற தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய் வதால் கிராம மக்களின் வசதி சுகாதாரம் தடைபட்டு விடும் நிலை ஏற்படும். இந்த தடையை நீக்க மாநில அரசு முன் வரவேண்டும்.

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து குடியரசுத் தலைவரிடம் ஒப் புதல் பெற்று சட்டத்தின் மூலம் நிறைவேற்ற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வறை எல் லாம் வலியுறுத்தி நடைபெறும் தொடர் உள்ளிருப்பு போராட் டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிக்க வந்தேன் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner