எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி,  ஏப்.25 ரயில்களில்  ஆண்டுதோறும் சராசரியாக மொத்தம் 1,000 குற்ற வழக் குகள் பதிவாகின்றன, அவற் றைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினர் நியமிக்க வேண்டும் என டிஆர்இயூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் ரயில்கள் மற்றும் ரயில் நிலை யங்களின்  திருட்டுகள் தொடர் பாக, தமிழகத்தில் மட்டும் மொத்தம் 658 வழக்குகள் ரயில்வே காவல்துறையினர் பதிவு செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய குற்றவியல் சட்டம் 395.396.398 பிரிவுகளின் கீழ் வழிப்பறி வழக்குகள் 3, அடுத்து 392,394,397,398,457,460 பிரிவுகளின் கீழ் கொள்ளை வழக்குகள் 57, மேலும் 379,380 பிரிவுகளின் கீழ் திருட்டு வழக்குகள் 598 ஆகியன இதில் அடங்கும்.

இவை தவிர பிற குற்ற வழக்குகளும் சேர்த்து ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 1,000 வழக்குகள் ரயில்வே காவல் நிலையத்தில் பதிவா கின்றன. இத் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகத் தின் கீழ் இயங்கும் தேசிய குற்றபதிவுகள் அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

மேலும் ரயில்வே பொருட் களை திருடுதல் மற்றும் வைத்திருப்பது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் 2015ஆ-ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 649 வழக்குகள் பதிவு செய்தனர் என்கிறது இந்த அமைப்பு. இந்திய அளவில் மொத்தம் பதிவான 926 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 70 சதவிகித வழக்குகள் தமிழகத்தில் மட் டும் பதிவாகியுள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் கைது செய்யப்பட் டவர்களில் பெண் குற்ற வாளிகள் 87 பேர், அதில் 85 பேர் தமிழகத்தை சேர்ந்த  பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறித்து தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) தொழிற் சங்க கோட்ட துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் கூறு கையில், அதிகரித்து வரும் ரயில் திருட்டு மற்றும் குற்றங் களைக் கருத்தில் கொண்டு, ரயில்கள் எண்ணிக்கை அதிக ரிப்பிற்கு ஏற்ற வகையில், பாதுகாப்பு பிரிவில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ரயில்வே துறை பயணிகளின் பயண பாதுகாப் பிற்கு என ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ. 24.10 மட்டுமே செலவிடும் நிலை உள்ளது.

இதனை காலத் துக்கு ஏற்றவாறு அதிகரித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் டிஆர்இயூ வலியுறுத் துகின்றது என்கிறார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner