எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஏப்.25 திருநெல் வேலி மாவட்ட ஆலைகளுக்கு, தாமிரபரணி நீரை வினியோ கிக்க தடை கோரிய வழக்கில், ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.

திருநெல்வேலி முத்துராமன் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம் வருமாறு: திருநெல் வேலி மாவட்டத்தில், 841 மி.மீ., மழைப் பொழிவு இருக் கும். கடந்த 2016இல் மூன்றில் ஒரு பங்கு மழை பெய்தது. திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, 283 கி.மீ., துரம் பய ணித்து, தூத்துக்குடி வழியாக கடலில் கலக்கிறது.

வறட்சி யால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. துத்துக்குடி மாவட்டத்தில், பல ஆலை களுக்கு தாமிரபரணி நீரை வினியோகிக்க, அம்மாவட்ட ஆட்சியர் ஜனவரியில் தடை விதித்தார். ஆனால், திருநெல் வேலி மாவட்ட ஆலைகளுக்கு தாமிரபரணி நீர் விநியோகிக் கப்படுகிறது.

இது தட்டுப் பாட்டை மேலும் அதிகரிக்கும். நீர் தட்டுப்பாடு நீங்கும்வரை, திருநெல்வேலி மாவட்ட ஆலை களுக்கு, தாமிரபரணி நீரை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு முத்துராமன் மனு செய்திருந்தார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல் முருகன் கொண்ட அமர்வு, 'மனுதாரர் அளித்த மனுவை திருநெல்வேலி ஆட்சியர் பரி சீலித்து, மூன்று வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner