எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 25- விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (25.4.2017) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டன.

இந்த போராட்டத்தையொட்டி கோயம்பேடு மார்க் கெட்டில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் முழுமை யாக கடைகளை அடைத்து விட்டனர். சில்லரை வியா பாரிகளின் ஒருசில கடைகள் மட்டும் காலையில் ஆங்காங்கே திறந்திருந்தன.

ஆனால் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் திறந்திருந்த ஒருசில கடைகளும் படிப்படியாக அடைக்கப்பட்டு விட்டன.

வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகளும் இன்று காலை வரவில்லை. அவை அனைத்தும் சென்னைக்கு வெளியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

இதேபோல் பழம், பூ மார்க்கெட்டும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. பெரம்பூர், வில்லிவாக்கம் அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆலந்தூர், சைதாப் பேட்டை, மாம்பலம், திருவான்மியூர், குன்றத்தூர் உள்பட பல பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளும் முழு மையாக மூடப்பட்டிருந்தன.

விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வெள்ளையன் தலை மையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகியவை முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் கடை கள் அனைத்தும் இன்று முழுமையாக மூடப்பட்டு விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

புதுவை

விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. தலைமையில் திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து இன்று (25.4.2017) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. புதுவையில் ஆளும் கட்சியான காங்கிரசும் முழு அடைப்பு போராட் டத்தில் பங்கேற்றுள்ளது.

இதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுவையில் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. அதேநேரத்தில் தமிழக அரசு பேருந்துகள் காவல்துறையின் பாதுகாப்போடு இயக்கப்பட்டது. புதுவை அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகளும் ஓடவில்லை. ஒரு சில தனியார் கல்லூரி பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது.

நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, காந்தி வீதி, மிஷன் வீதி, நேருவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பெரியமார்க்கெட், சின்னமார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், அரியாங்குப்பம் மார்க்கெட் ஆகியவை இயங்கவில்லை.

தொழிற்பேட்டைகளில் உள்ள தனியார் தொழிற் சாலைகளில் ஒரு சில மட்டுமே இயங்கின. திரையரங்கில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக புதுவை யில் இந்த போராட்டம் வெற்றி பெற்றது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நகரெங்கும் காவல்துறையினர் ரோந்து சென்றனர். முக்கிய சந்திப்பு களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

ஈரோடு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி யும் தண்ணீர் இன்றி வறட்சியால் வாடும் விவசாய பெருங்குடி மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று (25.4.2017) தமிழகம் முழுக்க முழு அடைப்புக்கு அழைப்பு கொடுத்தது திமுக தலைமையிலான எதிர்கட்சிகள்.

ஜவுளி மற்றும் மஞ்சள் தொழில் நகரான ஈரோட்டில் இன்று ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் மஞ்சள் மண்டிகள், உணவு விடுதிகள், கனிமார்கெட், தொழில் நிறுவன கடைகள் மூடப் பட்டிருக்கிறது.

ஆட்டோக்கள் ஓடவில்லை சில அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது ஆனால் பொதுமக்கள் கூட் டம் இல்லாமல் இருக்கிறது பிரதான சாலைகளான  பிரப்ரோடு, சத்திரோடு, மணிக்கூண்டு பகுதிகள் வெறிச் சோடி காணப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தின் பிற ஊர்களான பவானி, பெருந்துறை, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், சென்னிமலை, சிவகிரி, கொடுமுடி என எல்லா பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு விசைத்தறி தொழிலாளர்கள் அய்ந்து  லட்சம் பேர் இன்று வேலைநிறுத்தத்தில் கலந்துள்ளார்கள்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட அனைத்து கட்சியினர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திண்டுக் கல்லில் பெரியார் சிலை முன்பு தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி தலைமையில் மறியல் செய்து 5 ஆயிரம் பேர் கைதாகினர், உடன் கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல் ஏ. பாலபாரதி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர்.

கோவை

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடந்து வரும் முழுகடையடைப்பு போராட்டத்திற்கு கோவை மாவட்டத்தில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன மேலும் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. காய்கறி மார்கெட், பழக்கடைகள் என அனைத் தும் அடைக்கப்பட்டுள்ளன.

கடலூர்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடந்து வரும் முழுகடையடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, தனியார் பேருந்து கள், ஆட்டோக்கள் ஓடவில்லை, காய்கறி சந்தைகள் அடைக்கப்பட்டுள்ளன. மிகவும் குறைவான எண்ணிக் கையில் பேருந்துகள் ஓடுகின்றன. பொதுமக்களும் அதிக அளவில் வெளியே வராமல் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நெய்வேலி

நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் மறியல் போராட்டம் நெய்வேலி நுழைவாயில் அருகில் நடைபெற்றது.  திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், அமைப்பாளர் சி.மணிவேல், வடக்குத்து ஊராட்சி தி.மு.க. பொருளாளர் சி.தர்மலிங் கம், மண்டல கழக இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், மா.இ.தலைவர் நா.உதயசங்கர், செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா.மாணிக்கவேல், நூலகர் கண்ணன் வடக்குத்து கிளை செயலாளர் அண்ணாதுரை மற்றும் கழக தோழர்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லீம் இயக்கங்கள் உள்ளிட்ட பல அமைப்பினர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 300க்கும் மேற் பட்டோர் நெய்வேலி வட்டம் -8 திருமண மணடபத்தில் அடைக்கப்பட்டனர்.

திருவையாறு

இன்று (25.4.2017) நடைபெற்ற விவசாயிகளுக்கு .ஆதரவாக மத்திய - மாநில அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி  யசோதையம்மாள் அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளோர். திராவிடர் கழகத்தின் தஞ்சை மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், ஒன்றியச் செயலாளர் துரை.ஸ்டாலின் பெரியார் பெருந்தொண்டர் எம்.எஸ்.கலியபெருமாள், தோழியர் துரை.அல்பேனியா தோழியர் மலர்க்கொடி, அ.பாலசுப்பிரமணியன் மேனாள் ஒன்றியத் தலைவர், விவேக விரும்பி, ஒன்றிய அமைப் பாளர், அ.மோகன்ராஜ் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர், பிருத்திவிராஜ் ஆகியோருடன் தி.மு.க மாவட்ட அவைத் தலைவர் க.தண்டபாணி, வை.சிவ சங்கர் ஒன்றிய திமுக செயலாளர் சி.நாகராஜன் திருவை யாறு நகரத் தலைவர் ஆகியோருடன் 80 திக, திமுக தோழர்கள் கைதாகி உள்ளனர்.

தஞ்சாவூர்

திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு குணசேகரன், மாவட்ட தலைவர் அமர்சிங், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த் தன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தருமசீலன், மாநகர தலைவர் நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், பூதலூர் ஒன்றிய தலைவர் இரா.பாலு, தஞ்சை ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், ஒன்றிய அமைப்பாளர் சு.மாதவரசன், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டு கழக செயலாளர் சிகாமணி, பெரியார் பெருந்தொண்டர்கள் சூரியமூர்த்தி, நாத்திகன் தஞ்சை நகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிக்குமார் மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், நகர செயலாளர் டி.கே.வி.நீலமேகம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மாநகர காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்தரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சொக்கரவி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ச் சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந் தோர் பங்கேற்றனர்.

குறிஞ்சிபாடி

குறிஞ்சிப்பாடி ரயில்வே சாலை பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. தலைமையிலான அனைத் துக் கட்சியினர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொறியாளர் வி.சிவக்குமார், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் குரு, ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், திமுக நகர செயலாளர் செங்கல்வராயன், சிபிஎம் இராஜூ, ஒன்றிய திமுக செயலாளர் நாராயணசாமி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்

விவசாயிகளுக்கான ஆதரவு போராட்டத்தில் ஓசூரில் மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ப.முனுசாமி, மாவட்ட துணை செயலாளர் அ.செ.செல்வம், நகர தலைவர் சி.மணி, ஒன்றிய தலைவர் மு.லட்சுமிகாந்தன், செயலாளர் மா.சின்னசாமி, நகர அமைப்பாளர் பெ.செல்லதுரை, நகர துணைத் தலைவர் தி.பாலகிருட்டிணன், ப.க. தலைவர் வெங்கட சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று விவசாயிகளுக்காகப் போராட்டக் களத்திற்குச் சென்ற கழக தோழர்கள் கைது செய்யப் பட்டனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து மறியலுக்குச் சென்ற போது மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப் பன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட துணைத்தலைவர் செ.இராசேந்திரன், நகரத் தலைவர் சு.கண்ணன், புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, ஆலங்குடியில் மண்டலத் தலைவர் வெ.ராவணன், கைகாட்டியில் அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, வடகாட்டில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு சு.மணியரசன், பொன்னமராவதியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத் தம்பி, ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, இளைஞரணி சரணவன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆங்காங்கே மண்டபங்களில் உள்ள திமுக கூட்டணிக் கட்சித் தோழர்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner