எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், ஏப்.25 பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தின விழா 22.04.2017 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினைப் பல் கலைக்கழக அர்சூன்சிங் நூலகம் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகள் துறை இணைந்து நடத்தியது. இவ்விழாவானது பல்கலைக்கழக அய்ன்ஸ்டின் அரங்கத்தில் நடைபெற்றது. நூலக இயக்குநர் முனைவர் டி. நர்மதா வரவேற்புரை ஆற்றினார்.

பல்கலைக்கழகத்தின்அறிவியல் மற்றும் மானிடவியல் மேலாண்மை புலத் தலைவர் முனைவர் ஏ.ஜார்ஜ் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து பல் கலைக்கழக நூலகத்தை பயன் படுத்த வேண்டியும், நூலக ஆலோசகர் முனைவர் ப.பெரு மாள் நூல்கள் வாசிப்பதன் அவ சியத்தை பற்றி எடுத்துரைத்தார்.

ஆங்கிலத்துறை தலைவர் (பொறுப்பு) உலக புத்தகத் தினவிழா, காப்புரிமை பற்றி மாணவர்களிடையே பேசினார்.

இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வல்லம் டி. தாஜ்பால் (தன்னம்பிக்கை பேச்சாளர்)  வாசிப்பே மனிதனை முழுமை யாக்கும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் பல தலைவர்கள் புத்தக வாசிப்பினால் வளர்ந்த விதம் பற்றி எடுத்துக் கூறினார். நூல்கள் வாசிப்பே ஒருவரை முழு மனிதனாக்கும் என்பதற்கு பல சான்றுகள் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து நூலகத் தின் அதிகமாக பயன்படுத்திய மாணவர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் சான்றிதழும் புத்தகக்காப்பும் வழங்கி சிறப் பிக்கப்பட்டது.

முடிவில் ஆங்கிலம் பன் னாட்டு மொழிகள்துறை பேரா சிரியை சு.சுரையா, நன்றி உரை கூற நாட்டுப்பண்ணோடு இவ் விழா இனிதே நிறைவுற்றுது.