எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.25 வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 41 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அனைத்து கட்சிகள் சார்பில் ஏப்ரல் 25ஆ-ம் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர்கள்  அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (25.4.2017) காலை யில் இருந்து தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஆயிரக் கணக்கான எதிர்க்கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையைப் பொருத்தவரை நகரின் முக்கிய வர்த் தகப் பகுதிகளான பாரிமுனை, தியாகராயர் நகர், புது வண்ணை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, ஆவடி, அம் பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய போராட் டம் வெற்றிக்கரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சரு மான கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத் தில் இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிடர் கழகம்,  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு மற்றும் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் அனை வரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் கட்சி கொடிகளுடன் சென்ற திமுகவினர் திடீர் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகுமாறு வலியுறுத்தினர். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய போராட்டம் வெற்றிக்கரமான முறையில் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களின் முக்கிய பெரு நகரங்கள், சிற்றூர்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

 

அரசு பேருந்துகளும் மிக குறைவான அளவிலேயே இயங்குகின்றன.  இன்று காலை நிலவரப்படி தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய மறியல் போராட் டம் மிக வெற்றிக்கரமான போராட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம் மிகப்பெரிய வெற்றி

மு.க.ஸ்டாலின் பேட்டி

விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என திருவாரூரில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய எதிர்க் கட்சியினர், விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூரில் என்னையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களை 4 கிலோ மீட்டர் நடக்க வைத்ததால் மிகப்பெரிய பேரணியே நடந்து விட்டது என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டம் பற்றி மத்திய அமைச்சர் வெங்கையா தவறான தகவல் கூறியிருக்கிறார் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வ தில்லை என்று தவறான தகவலை கூறியிருக்கிறார். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது விவசாயிகளின் வங்கிக் கடன் 10,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்யா விட் டால் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

அதிமுக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் மதுக்கடையைத் திறக்க ஆர்வம் காட்டுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசியலுக்கு அப் பாற்பட்டு தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதிமுகவில் பதவியை ஏலம் போடும் நிலை உருவாகியுள்ளதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். யார் முதலமைச்சர் என்ற கட்டப்பஞ்சாயத்து அதிமுகவில் நடந்து கொண் டிருக்கிறது. மேலும் முதல்வர் பதவிக்குரிய தகுதி, திறமை பழனிசாமிக்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner