எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

சென்னை, ஏப். 26- தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட் டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் பதிவு செய்திருப்ப தாவது:-

விவசாயிகளின் உரிமைக ளைக் காக்கவும், தமிழக மக் களின் அடிப்படைத் தேவை களை நிறைவேற்றவும் வலியு றுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாநிலம் தழுவிய அள வில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், முழுமையான அளவில் வெற்றி பெற்றிருக்கி றது.

இதற்காக தமிழக மக்க ளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட் டத்தில் வணிகபெருமக்கள், தொழிலாளர்கள், உணவக உரிமையாளர்கள், தனியார் நிறுவனங்களை நடத்துவோர், திரையுலகினர், இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் பங் கேற்று விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழகத்தின் அடிப் படைத் தேவைகளை நிறை வேற்றவும் வலியுறுத்தி அமை தியான வழியிலே அறநெறியிலே மத்திய-மாநில அரசுகளுக் குத் தங்களின் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க, இந்திய தேசிய காங் கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ் லிம் லீக், திராவிடர்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட இயக்கத் தமி ழர் பேரவை உள்ளிட்ட பல் வேறு கட்சிகளும் அமைப்பின ரும் விவசாயிகள் சங்கத்தினரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒன்றிணைந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள னர்.

கலைஞரின் திருவாரூரில்

காவிரி டெல்டா மாவட்ட மான -தலைவர் கலைஞர் அவர் களின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் நடந்த மறியல் போராட்டத்தில் நான் பங் கேற்று ஆயிரக்கணக்கானத் தொண்டர்களுடனும் தோழ மைக் கட்சியின் நிர்வாகிகளு டனும் விவசாயிகள்  வணிகர் கள் - பொதுமக்கள் ஆகியோரு டனும் கைதானேன். எங்களை மண்டபத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என 3 கிமீ. நடக்க வைத்ததில், இந்தப் போராட்டம் ஒரு பேரணியாக மாறியது. டில்லியில் 40 நாட் களுக்கு மேலாக, மேல்சட்டையின்றி குளிரிலும் வெப்பத் திலும் சளைக்காமல் போராடிய திரு.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சென்னை திரும்பி, இந்த அனைத்துக் கட் சிகளின் போராட்டத்தை ஆத ரித்ததுடன் மட்டுமின்றி, டில் லியிலிருந்து வந்த ரயிலிலி ருந்து இறங்கியவுடனேயே மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அய்யாக்கண்ணு

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர் களின் போராட்டத்தில் அய்யா கண்ணு அவர்கள் பங்கேற்று கைதாகியுள்ளார். ஒரு சில கட் சிகள் அரசியல் காரணங்களுக் காக இந்த முழு அடைப்பில் பங்கேற்கவில்லை என்றாலும் அவர்களும் இதிலுள்ள கோரிக் கைகளின் நியாயத்தை உணர்ந் தவர்கள்தான் என்பதை அறி வேன். தி.மு.க. மீது தனிப் பட்ட முறையில் சில அரசியல் கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட் டுகள் பற்றி நாங்கள் கவலைப் படுவதில்லை.

தமிழக விவசாயிகள் நல னுக்காக இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் ரத்து, உள் ளிட்ட திட்டங்களை செயல் படுத்தியது தி.மு.க அரசு என் பதை காவிரி டெல்டா விவசாயிகள் உள்பட அனைத்துப் பகுதி விவசாயிகளும் அறிவார் கள். அரசியல் எல்லைகளைக் கடந்து இன்று (25.4.2017) இந்த முழுஅடைப்பு நடைபெற்றுள் ளது. தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் முழுமை யாக அடைக்கப்பட்ட நிலை யில், பேருந்து போக்குவரத்தும் பல இடங்களில் முழுமையாக இல்லை. அரசுத் தரப்பில் தங் களின் ஆளுமையைக் காட்ட வேண்டும் என காலி பேருந்து களை பல இடங்களில் இயக்கி யுள்ளனர்.

சிறப்பு வேளாண்மை மண்டலமாக...

பொதுமக்களின் எண்ணங் களை மதிக்காமல் இத்தகைய வீண் போக்குகளை இனியா வது கைவிட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றுவதில் மத்திய-, மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண் டும். காவிரி மேலாண்மை வாரி யத்தை விரைந்து அமைப்பதில் மத்திய அரசும், விவசாயிகளின் அனைத்து வகைக் கடன்களை ரத்து செய்வதில் மாநில அரசும் முனைப்பு காட்டிட வேண்டும். தமிழகத்திற்கு ஏற்படும் நிதிச் சுமையை மத்திய அரசு பங் கிட்டுக் கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க ஆவன செய்ய வேண்டும்.

பட்டினி சாவுகளை தடுக்க...

பொதுமக்களின் அடிப்ப டைத் தேவையான குடிநீர், தட்டுப்பாடின்றி கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வறட்சி காலத்தில் பட் டினிச்சாவுகளைத் தடுக்கும் வகையில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழிகாண வேண்டும். மதுவிலக்கை முழு மையாக நடைமுறைப்படுத்தக் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள் போர்க் கோலம் பூண்டுள்ளனர். சிறு வர்களும் போராடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் மாநில அரசு, நெடுஞ்சாலை களில் மூடிய கடைகளை எங்கே திறப்பது என்றும், சாலைகளை வகைமாற்றம் செய்வது குறித் தும் ஆராய்கிறது. இதனை எதிர்த்து தி.மு.கழகத்தின் சார் பில் தொடரப்பட்ட வழக்கில், 3 மாதங்களுக்கு மதுக்கடை களைத் திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத் தரவிட்டிருப்பது இந்த முழு அடைப்பிற்கு கிடைத்துள்ள அடையாள வெற்றி. கோரிக் கைகள் முழுமையாக நிறை வேறும் வரை முனைப்பான போராட்டங்கள் தொடரும்.

நிச்சயமாக ஆட்சி மாற்றம்

தமிழக மக்களின் நலனுக் காகத் தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் ஒருங்கிணைப் புடனும் தொடர்ந்து களம் காண்போம். இது தேர்தல் வெற்றிக்கான அணி அல்ல. அதேநேரத்தில், மக்களின் நலனை ஆட்சியாளர்கள் புறக் கணித்து, தேர்தலை திணிக்கும் சூழலை உருவாக்கினால் நிச் சயம் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் அணியாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் தெரிவித்து உள்ளார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner