எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 26- ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற குழு என்னும் மத்திய அரசு குழுவின் பரிந்துரைகளுக்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி குடியரசு தலைவர் பிர ணாப் முகர்ஜி ஒப்புதல் அளித் தார். அந்த குழுவின் 105ஆ-வது பரிந்துரையின்படி, குடியரசு தலைவர், அமைச்சர்கள் இந்தி எழுத, பேச தெரியும் என்ற பட்சத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டுமே பேசவேண் டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இந்தி திணிப்பு நட வடிக்கைகள் இந்தி தாய் மொழி அல்லாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பை சந் தித்துள்ளது.

இந்தநிலையில் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள், மன் மோகன் சிங் பிரதமராகவும், உள்துறை அமைச்சராக பதவி வகித்த தமிழரான ப.சிதம்பரம் இருந்தபோது தொகுக்கப்பட்ட தாகவும், அந்த பரிந்துரைகள் பிரதமர் மோடியால் வலியுறுத் தப்பட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தற் போது ஒப்புதல் பெறப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளது. இந்தி திணிப்பு நட வடிக்கைக்கு காரணம் யார்? என்பது குறித்து ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற குழு தொடர்பாக சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். ஆட்சிமொழிக் கான நாடாளுமன்ற குழுவின் அலுவல் சார்ந்த தலைவராக உள்துறை அமைச்சர் இருப் பார். துணைத்தலைவராக சத்ய விராட் சதுர்வேதி எம்.பி. இருந்தார். இந்த குழுவில் உள்ள 30 பேரில் 28 பேர் இந்தி பேசுபவர்கள் அல்லது இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர் கள்.

அனைவருமே இந்தி நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள் என்றே கருதலாம். அவர்கள் 3 துணை குழுக்களாக பிரிந்து இருப்பார்கள். சதுர்வேதி எம்.பி. தலைமையிலேயே ஆதாரம் மற்றும் மசோதாக்கள் மீதான வரைவு நடந்தது. இது தொடர்பான அறிக்கை துணை குழுக்களால் தயாரிக்கப்பட்டு, ஆட்சிமொழிக்கான நாடாளு மன்ற குழுவால் விவாதிக்கப் பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆட்சிமொழிக்கான நாடா ளுமன்ற குழு மற்றும் துணை குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தியிலேயே நடந்தது. குழுக்களில் பெரும் பான்மையானோர் அந்த அறிக் கையை ஏற்றுக்கொண்டனர். இந்த சூழலில் அலுவல் சார்ந்த தலைவர் என்ற முறையில் சிறிய மாற்றங்களை கூட செய் யமுடியாது. அதிக பெரும் பான்மை இருக்கும் பட்சத்தில், அதனை நிராகரிப்பதற்கு அலு வல் சார்ந்த தலைவருக்கு அதி காரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner