எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.26 தமிழ்நாட்டில் பள்ளிக்கூட பாடத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற் றப்படுவது உண்டு. ஆனால் பல ஆண்டுகளாக பிளஸ் -1, பிளஸ்- 2 பாடத்திட்டம் மாற்றப்பட வில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பிளஸ்- 1, பிளஸ் -2 பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த பாடத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப் பட்டது. கடந்த ஆண்டு மத்திய அரசு அனைத்து மாநில மாண வர்களும் நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் எம்.பி.பி.எஸ். படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது. ஆனால் தமிழகத்துக்கு விதி விலக்கு கோரி முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதன் காரண மாக தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அதே போல விதிவிலக்கு கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அது அப்படியே கிடப்பில் உள்ளது. அடுத்த மாதம் 7-ஆம் தேதி நீட் தேர்வு நடை பெற உள்ளது. ஆனால் இன்னும் நீட் தேர்வுக்கு தமிழ கத்துக்கு விதிவிலக்கு உண்டா? இல்லையா? என்று இன்னும் மத்திய, மாநில அரசுகள் அறி விக்கவில்லை. இதனால் மாண வர்கள் குழப்பம் அடைந்துள் ளனர்.

நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களில் பெரும் பாலானோர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள், எனவே தமிழகத்தில் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் சென்னை டி.பி.அய். வளாகத்தில் உள்ள பாடநூல் விற்பனை நிலையத்தில் பிளஸ் -1, பிளஸ் -2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. இது பற்றி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றார்.

பிளஸ்- 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டில் (2018-2019) மாற்றப்படலாம். வழக்க மாக பிளஸ் -1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்திய மறு ஆண்டு தான் பிளஸ் -2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப் படும். எனவே 2019 - -2020 கல்வி ஆண்டுதான் பிளஸ் -2 புதிய பாட திட்டம் வரும் என தெரிகிறது.

இது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் கூறுகையில், அடுத்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடக்கிறது. எனவே நீட், பொறியியல் நுழைவு தேர்வை எழுத தகுதி வாய்ந்த பாடத்திட்டம் தேவை. தற்போதைய பாடத்திட்டம் நீட் தேர்வை சமாளிக்கும் வகையில் இல்லை. எனவே கண்டிப்பாக பிளஸ்- 1, பிளஸ்- 2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண் டும். இரு தேர்வுகளையும் மாண வர்கள் எழுத இலவசமாக பயிற்சி மய்யங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner