எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை. ஏப்.26 குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் கலந்துபேசி பழகுவதற்காகவே தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பழகுமுகாம் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் இன்று (26.4.2017) வழக்கத்தைப் போலவே குதூகலமாக தொடங் கியது.

இந்த ஆண்டு ஏப்ரல் 26 முதல் 30 முடிய 5 நாட்கள் பெரியார் பிஞ்சுகளுக்கான பழகுமுகாம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதுபோலவே ஏப்ரல் 26 ஆம் நாளான இன்று (26--.04.-2017) தொடங்கியது. காலையில் பல்கலைக்கழகத்தின் முகப்புக் கட்டடத்தில் மாணவர் களுக்கான பதிவுகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சொர்ணா அரங்கநாதன் கட்டடத்தில் அவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டு, உணவு முடிந்ததும் குழுக்கள் பிரிக்கப்பட்டு உரிய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு முதல் வகுப்பாக ஒரு குழுவினர் உடற்பயிற்சி பேராசிரியர் ரமேஷ் தலைமையில் மருத்துவக் கல்லூரி நகருக்கு அருகிலுள்ள கணபதி நகரில் அன்னை சத்யா நீச்சல் குளத் தில் நீச்சல் பயிற்சி அளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப்பயிற்சி அனைவருக்கும் சுழற்சி முறையில் நாள் தோறும் வழங்கப்படவிருக்கிறது. மற்றொரு குழுவிற்கு பல்கலைக் கழகத்தின் உள்விளையாட்டரங்கில், கட்டட எழிற்கலைத்துறையின் உதவிப் பேராசிரியாரான திருநாவுக் கரசு அவர்கள் மூலம் ஓவியப்பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக குழந்தைகளுக்கு குருதிப்பரிசோதனை செய் யப்பட்டு அதுதொடர்பான குறிப்புகள் எடுத்துக்கொள்ளப் பட்டன.

இந்த ஆண்டு கலந்து கொண்ட மாணவர்களின் இன்றைக்கு காலை வரையிலான எண்ணிக்கை 128 பேராவார்கள். இதில் மாணவர்கள் 81 பேர். அதிலும் முது சிறார்கள் 37, இளஞ்சிறார்கள் 44. மாணவிகளில் 47 பேரில் முது சிறார்கள் 25, இளஞ்சிறார்கள் 22.

முகாமை பெரியார் பாலிடெக்னிக் துணைமுதல்வர் பேராசிரியர்  உ.பர்வீன் அவர்கள் பார்வையிட்டு தக்க ஆலோசனைகளை வழங்கினார். கழகத்தின் துணத்தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் மற்றும் புதுவை திராவிடர் கழகத்தின் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு பிஞ்சுகளை உற்சாகப்படுத்தினர். பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியரும், பழகுமுகாமின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜெயக்குமார், மற்றும் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரின் மேற்பார்வையில் வகுப்புகள் தொடங்கப் பட்டு நடைபெற்றன. முதலாமாண்டு பொறியியல் மாண வர்கள்  மற்ற ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner