எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாணியம்பாடி, ஜூன் 19 அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளைத் தீர்க்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

வாணியம்பாடி அருகே தமிழக, -ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூர் கனகநாச்சி யம்மன் கோயில் அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த் திக் கட்டியுள்ளது. இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டியுள்ளதால் அதிகபட்ச மழை பெய்தாலும் தமிழக பாலாறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர அரசு கங்குந்தி ஊராட்சி மற்றும் குப்பம்- விஜிலாபுரம் சாலையின் இடையே இரட்டைபாலாறு என்ற கிராமம் அருகே, பாலாற் றின் குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மேம்பாலம் என்ற பெயரில் உயரமான கட்டுமானப் பணிகளை கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

இதையடுத்து, திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவ ருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரட்டை பாலாறு பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டி வரும் புதிய மேம்பாலத்தை நேரில் பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய மாவட் டங்களுக்கு பாலாற்றின் நீர் கிடைக்காத வகையில், தங்கள் பகுதியிலேயே தண்ணீரைத் தடுத்து ஆந்திர அரசு பாலாறு மற்றும் பாலாற்றின் கிளை ஆறான கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினைகளை தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்ப் பதற்கு ஆளும் அதிமுக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டி ருக்க வேண்டும். மேலும் தமி ழக அரசு உடனடியாக அனைத் துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதற்காக எத்தகைய முயற்சிகளையும் எடுக்கவில்லை.

மாறாக, தமிழகத்தில் குதிரை பேரம் நடத்தி ஆட் சியை தக்க வைத்துக்கொண்டு ஒரு நிலையற்ற, செயலற்ற ஆட்சியாக அதிமுக அரசு இருந்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினை வரும்போது, மூத்த அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து நதிநீர் பாதுகாப்பு கமிட்டி ஒன்றை நியமிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

இங்கு கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வரக்கூடிய கால கட்டத்தில் தடுப்பணையாக மாற வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தடுப்பணை கட்டுவது குறித்து பரிசீலித்து முடிவெ டுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner