எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட பிரச்சினை
பேச அனுமதி மறுப்பு - திமுக வெளிநடப்பு

சென்னை, ஜூன் 19 சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய் யப்பட்டது தொடர்பான பிரச்சினைகுறித்து தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன் என்பதை சட்டமன்றத்தில் வலியுறுத்த முயன்றபோது,  பேச அனுமதிக்க பேரவைத் தலைவர் மறுத்ததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மு.கஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தார்கள்

சட்டமன்றத்தில் இன்று (19.6.2017) கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று பேசியதாவது

தேர்தல் ஆணையத்தின்மூலம் ஓர் அறி விக்கை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட பிறகும், இதுவரை வழக்கு போடவில்லை. முதலமைச்சர் மற்றும் அப்பிரச்சினையில் தொடர்புள்ள அமைச்சர்கள்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மேலும் விவாதிக்க அவையை ஒத்திவைத்து விரிவாக விவாதிக்கஅனுமதிக்க வேண் டும் என்று பேரவைத் தலை வரிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பேரவைத் தலைவர் பதில் அளிக்கையில்:- - நீங்கள் கொடுத்துள்ள இப் பிரச்சினை ஆய்வில் உள்ளது. அதைப்பதிவு செய்துள்ளேன். இது முக்கியப்பிரச்சினை என்பதால், போதுமான அவ காசம் தற்போது இல்லை. பிறகு இதுகுறித்து விவாதிக் கலாம் என்றார். இப் பிரச்சினை குறித்து மேலும் விவாதிக்க பேரவைத் தலைவர் அனுமதிக்காததாலும், முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததாலும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலை மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வழக்கு புலனாய்வில் உள்ளது:

முதல்வர் அறிவிப்பு

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து, இப்பிரச்சினை குறித்த வழக்கு புலனாய்வு விசாரணையில் உள்ளது என்றார்.

திமுக எழுப்பிய இதே பிரச்சினையை, காங்கிரசு கட்சியின் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.இராமசாமியும் பிரச்சினையை எழுப்ப முயன்றார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை.

அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு

இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத் தின்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் ஒரு துணைக் கேள் வியை எழுப்பினார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க மறுத்ததால், அதைக் கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்.

மின்சாரத்துறை

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், 2017,2018 ஆம் ஆண்டுக்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக்கான மானியக்கோரிக்கையை அத்துறைக்காக அமைச்சர் பி.தங்கமணி தாக்கல் செய்து, அதன்மீதான விவாதம் நடைபெற்றது.

சேவை வரி சட்டமுன் வடிவு அறிமுகம்

2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட முன்வடிவை இன்று (19.6.2017)   பேரவையில் வைத்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner