எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 14- தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ் வுப்பகுதி வலுப்பெற்று அதே இடத்தில் நீடித்த போதிலும் அடுத்த 2 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்பதால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. சில நாட்களில் பருவமழை தீவிரம் அடைந்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள் ளிட்ட வட கடலோர மாவட் டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. உள் மாவட்டங்களி லும் பரவலாக மழை பெய்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக் குனர் பாலச்சந்திரன் கூறியதா வது:-

கடந்த 10-ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களி லும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சீ புரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து இருக்கிறது.

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் வட திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும்.
இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner