எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீழ்திருவிழாப்பட்டி, நவ.14 பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மய்யத்தின் பெரியார் புரா திட்டத்தின் கீழ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித் துறை, பெரியார் மருத்துவக்குழுமம், திருச்சி ஹர்சமித்ரா மருத்துவமனை மற்றும் மாத்தூர் சாயா தொண்டு நிறுவனம் இணைந்து பெரியார் புரா கிராமம் கீழ திருவிழாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12.11.2017 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இலவச பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

40 பேர் அடங்கிய மருத்துவக்குழு


பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக்குழுவுடன் மருத்துவ முகாமில் 40 க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவுடன் மருத்துவர்கள் சேவை வழங்கினார்கள். இந்த ஆண்டு நடைபெறும் ஏழாவது மருத்துவ முகாம் ஆகும். இந்த மருத்தவமுகாம் அனைத்து புரா கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.

நரிக்குறவ இன மக்களுக்கு...

இந்த முகாமில் குழந்தைகள், பெண் கள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 314 பேர் கலந்துகொண்டு பயனடைந் தனர். இதில் நரிக்குறவ இன மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். மற்றும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் சோத னையில் பெண்கள்  கலந்துகொண்டு பயனடைந்தனர் என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது.

சிறந்த மருத்துவ சேவை


இந்த மருத்துவக்குழுவில் பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர்

மரு.ஆர்.கவுதமன், மரு.எஸ்.பிறைநுதல் செல்வி (பொருளாளர் திராவிட கழகம்), மரு.எம்.புஷ்பா- (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மருத்துவமனை வல்லம்),  மரு.வி.பஞ்சாட்சரம் (பெரியார் மருத்துவ மனை சோழங்கநல்லூர்), மரு.தியாக ஆர்த்தி (பெரியார் மருத்துவமனை திரு வெறும்பூர்) ஆர்.செந்தாமரை- (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி) மரு.எம்.ரமியா- (ஹர்சமித்ரா மருத்துவ மனை திருச்சி) ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ சேவை வழங்கினர்.

மின்சாரம் தாக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை

இந்த முகாமில் மியூசி என்ற பெண்ணுக்கு மின்சாரம் தாக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் கொண்டுவந்தனர் அவருக்கு நமது மருத்துவக்குழு மிகவும் சிறப்பாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு மாலை நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு வேண்டிய குறிப்பிட்ட மருந்து வகைகள் குறிப்பாக ஊசி மூலம் ஏற்றும் மருந்து மற்றும் டிரிப்ஸ் போன்ற அவசர தேவைப்படும் மருந்து வகைகள் மருத்துவ முகாம் மூல மாகவே விரைவாக ஏற்பாடு செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பேரா.முனைவர் த.ஜானகி அனைவரையும் வரவேற்றார்.

மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேரா.முனைவர்.அ.ஆனந்த் ஜெரார்டுஜெபாஸ்டின், பேரா.முனைவர் எம்.அறிவானந்தன் மற்றும் சமூகப்பணித் துறை நான்காம் ஆண்டு மாணவி, மாண விகள் இந்த மருத்துவமுகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றினர்.     

இறுதியாக இயக்குநர் பேரா.முனைவர் த.ஜானகி இந்த மருத்துவமுகாம் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுத்து பெரும் உதவிபுரிந்த  இராபர்ட், நிறுவனர் மாத்தூர் சாயா தொண்டு நிறுவனம் கீழ திருவிழாப்பட்டி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை பேராசிரியர்கள் முனைவர் அ.ஆணந்த் ஜெரார்டு ஜெபாஸ் டின் முனைவர் எம்.அறிவானந்தன், சமூகப்பணித்துறை நான்காம் ஆண்டு மாணவி, மாணவிகள் மற்றும் பெரியார் புரா திட்ட ஒருங்கிணைப்பாளர் க.முரு கேசன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner