எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மதுரை, டிச.7 தமிழகத்தில் நீதிமன்றம் உத்தரவிற்கு பின்பு, 1000 அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையா சிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது.

பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதில் இருந்த சில நடைமுறைகளுக்கு எதிராக, சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளி தலைமை யாசிரியர் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக, 950க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில் பதவி உயர்வு மூலம், தலைமை யாசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற் பட்டது.

இந்நிலையில்  சென்னை உயர்நீதி மன்றம் பதவி உயர் வுக்கான இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. அதை யடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இடைக்கால தடையை நீக்கியது. ஆனாலும் தலைமை யாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காமல்,  இழுத்த டிக்கின்றனர் என புகார் எழுந் துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமிசத்திய மூர்த்தி கூறுகையில், “நீதிமன்ற இடைக் கால தடையால், ஓராண்டுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங் களை நிரப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது தடை நீங்கி யுள்ளது. இனியும் தாமதிக்காமல் மாணவர் நலன், கற்பித்தல் பணி, தேர்ச்சி சதவிகிதத்தை கவனத்தில் கொண்டு, இம்மாதத் திற்குள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரித்து அனைத்து பணியிடங்களையும் ‘கலந்தாய்வு’ மூலம் நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner