எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருச்சி, டிச.7 அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தது.

அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இந்த தமிழ் இருக்கை அமைக்க திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. சங்க வளாகத்தில் புதன்கிழமை இந்த நிதியளிப்பு விழா கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனைவர் ஆறுமுகத்திடம், சங்கத் தலைவர் அய். அரங்கராசன் நிதி வழங்கினார்.

திருச்சி தமிழ்ச் சங்கம் அளித்த ரூ.1 லட்சமானது பாரத ஸ்டேட் வங்கி மூலம் அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டு, பல்கலை. தமிழ் இருக்கை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி காசோலையை பெற்றுக் கொண்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனைவர் ஆறுமுகம் கூறியது: தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. இருக்கை தொடங்க காரணமாக இருந்த மருத்துவர்களே 1 மில்லியன் டாலர் அளித்துவிட்டனர். இதர வகையில் நன்கொடையாக 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. தொடர்ந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன என்றார்.

உத்தராகண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

புதுடில்லி, டிச.7 உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் நேற்று இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.

கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் டில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினர். மேலும், அலுவலகத்தில் வேலை செய் பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner