எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தஞ்சை, ஜன. 3- தஞ்சையில் மாநில உரிமையில் தலையிடு வதாகக் கூறி ஆளுநர் காரின் முன்பு தி.மு.க.வினர் கருப்புக் கொடிகளை வீசி போராட்டம் நடத்தினர். இதேபோல், விவ சாயிகளும் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், தான் செல்லும் இடமெல்லாம் ஆய்வு பணி மேற்கொள்கிறார். அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்துகிறார். இதற்கு மாநில உரிமையில் தலையிடுவதாக ஆளுநருக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட் சிகள் கடும் எதிர்ப்பும், கண்ட னமும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில்,  தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் "தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணி மேற் கொண்டு ஆய்வு செய்வதற்காக நேற்று காலை 9.15 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோ கித் வந்தார். ஆளுநருக்கு கறுப் புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் காலை 8 மணிக்கு தஞ்சை புதிய பேருந்து நிலையம் நோக்கி தி. மு.க.வினர், தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேக ரன், வடக்கு மாவட்ட செயலா ளர் கல்யாணசுந்தரம் தலைமை யில் கருப்புக்கொடி ஏந்திய வாறு சென்றனர்.

காவல்துறை கண்காணிப் பாளர் செந்தில்குமார் தலைமை யில்  100க்கும் மேற்பட்ட காவல் துறையினர், பேருந்து நிலையத் தின் வெளியே தடுத்து நிறுத்தி னர். இதைதொடர்ந்து சரபோஜி கல்லூரி எதிரே நின்று ஆளுந ரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் முழக்க மிட்டனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக் கம், முன்னாள் அமைச்சர் உப யதுல்லா, எம்எல்ஏக்கள் ராமச் சந்திரன், சாக்கோட்டை அன் பழகன், கோவி.செழியன் உள் ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்கு ஆளு நர் பன்வாரிலால் புரோகித் காரில் சென்றார். அவரது காரை பார்த் ததும் சாலையோரம் நின்ற தி.மு.க.வினர் கண்டன ஒலி எழுப்பினர். ஒரு சிலர், ஆளுர் காரை நோக்கி, கருப்புக்கொடி களை தூக்கி வீசினர்.  சாலை யில் விழுந்த அவற்றை காவல் துறையினர் அப்புறப்படுத்தி னர்.

விவசாயிகள் கருப்புக்கொடி

தஞ்சை ஆத்துப்பாலம் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஆளுநர் நேற்று மதியம் 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை அஞ்சலகத்திலிருந்து விவசாயிகள் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியர சன் தலைமையில் கருப்பு கொடி யுடன் ஊர்வலமாக புறப்பட்ட னர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து மணியரசன் கூறும் போது, `தமிழகத்துக்காக ஆளு நர் பன்வாரிலால் புரோகித் எது வும் செய்ததில்லை. ஆனால், மக்களிடம் மனுக்கள் வாங்கி தீர்வு காணப் போவதாக நாட கம் போடுவதை கண்டிக்கி றோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner