எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பேராவூரணி, ஜன. 3-- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாதகாரணத்தால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இத னால் விவசாயிகள் வேதனை யில் உள்ளனர். சேதுபாவாசத் திரம் கடைமடைப் பகுதியில் உள்ள கட்டையங்காடு, பூவா ணம், பள்ளத்தூர், விளங்குளம், சோலைக்காடு, முதுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட் டுமே நடந்து வருகிறது. நெல் சாகுபடியை தவிர்த்து பெரும் பாலான பகுதிகளில் தென்னை சாகுபடியும் மேற்கொ

ண்டு உள்ளனர். குறைந்த அளவு விவசாயிகள் மட்டும் நெல் சாகுபடி செய்துவருகின்றனர்.

இந்தாண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கோடை சாகுபடியும் செய்ய முடிய வில்லை. தற்போது கடை மடைப்பகுதியில் போதுமான மழை பெய்யாததால் ஏரி, குளங் கள் நிரம்பவில்லை. அதே நேரம் மேட்டூர் அணையும் ஓரளவு நிரம்பி காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டாவது ஒரு போகம் சம்பா சாகுபடி செய்து விட லாம் என எண்ணியிருந்த கடை மடை விவசாயிகளுக்கு ஏமாற் றமே மிஞ்சியது. அணை திறந் தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையை பயன் படுத்தியும், மேட்டூர் அணையிலிருந்து கிடைத்த குறைந் தளவு தண்ணீரை கொண்டு நேரடி விதைப்புமூலமாகவும், நாற்றாங்கால் அமைத்தும்சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால் கடைமடைக்கு தண் ணீர் வரவில்லை. நடவுப்பணி முடிந்து கடந்த 30 நாட்களாக அந்த பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவ சாயிகள் வேதனையடைந்துள்ள னர். இதுகுறித்து பள்ளத்தூர் விவசாயிகு.அ.கூத்தலிங்கம் கூறுகையில், கல்லணைக் கால் வாய் புதுப்பட்டினம் வாய்க் காலில் தண்ணீர் திறந்து இப் பகுதிக்கு இரண்டு தினங்களுக்கு மட்டுமே வந்தது. கடந்த ஒரு மாதகாலமாக புதுப்பட்டினம் வாய்க்காலில் தண்ணீர் வர வில்லை.

இப்பகுதிகளில் நேரடி விதைப்புமூலமாக சுமார் 40 ஏக்கர் பரப்பில் சம்பாசாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பயிர்களும் தண்ணீர் இல்லாமல்கருகிவருகின்றன. போதிய மழையும் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களும் முழு மையாக நிரம்பவில்லை. ஆகையால் கடைமடை பகுதி களில் உள்ள பயிர்களை காப் பாற்ற கல்லணை கால்வாய் புதுப்பட்டினம் வாய்க்காலில் தண்ணீர் வர தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரி களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner