எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


சென்னை,ஜன.3 பெண்ணுரிமையைப் பாதிக்காத அளவிற்கு முத்தலாக் சட்டத் திருத்தம் இருக்கவேண்டும்; நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலிக்கட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் 1.1.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: ‘முத்தலாக்‘ சட்டம் கீழவையில் நிறைவேற்றி விட்டது; மேல வையில் நிறைவேறுவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறதே?

தமிழர் தலைவர்: அந்த மசோதாவின் திருத்தங்கள் பெண்ணுரிமையைப் பாதிக்காத அளவிற்கு இருப்பது வர வேற்கத்தக்கது. அதேநேரத்தில், சிறை, தண்டனை என்கிற அளவிற்குப் போகக் கூடாது.  செல்லாது என்று சொன்ன பிறகு சிறைத் தண்டனை எங்கிருந்து வந்தது?

எதிர்க்கட்சிகள்தெளிவாகக்கேட்டி ருப்பதுபோல,அந்த மசோதா நாடா ளு மன்றநிலைக்குழுவிற்குஅனுப்பப் பட்டு, தெளிவாக ஆய்ந்து, அவசரப் படாமல், முடிவு எடுக்கப்படவேண்டும். ஏனென் றால், இது ஒரு ‘சென்சிட்டிவ் பிராப்ளம்‘ என்பதினால், எல்லா தரப் பினுடைய கருத்துகளையும் கேட்டு செய்ய வேண்டும்.

இசுலாமியப் பெண்களைப்பற்றி மிகக் கவலைபடுபவர் நமது பிரதமர் பாருங்கள் -  அவர் அக்கறையோடு பல கருத்துகளை சொல்லியிருக்கிறார் என்று நம்புவோம்!

செய்தியாளர்: திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் என்று சொல்லிய ரஜி னிக்கு சபாஷ் என்று எச்.ராஜா டுவிட்டரில் சொல்லியிருக்கிறாரே, அது பற்றி...?

தமிழர் தலைவர்: ரஜினியிடம் ஆன்மிக அரசியல் என்றால் என்ன? என்று கேட்கவேண்டும். சம்பந்தமில்லாத யாரோ ஒருவரிடம் கேட்டு என்ன பயன்?

மந்திரியாக ஆகப் போகிறவர்களிடம் கேளுங்கள்; ராஜாவாக எப்பொழுதும் இருக்கக்கூடியவரிடம் கேட்டு என்ன பயன்?

பதவிக்கு ஆசைப்படாத, தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, நேரே பாபாவிடம் போவதற்குத் தயாராக இருக்கிற ரஜினி அவர்களுக்குப் பதவி, புகழ் போன்றவற்றில் ஆசை இல்லை என்று சொல்கிற அவர்தான், ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்று சொல்லவேண்டும்.

செய்தியாளர்: ரஜினியின் அரசியலுக் குப் பின்னால் பா.ஜ.க. இருந்து இயக்கு கிறது என்கிறார்களே?

தமிழர் தலைவர்: அதை அவர்தான் சொல்லவேண்டும். காரணம் என்ன வென்றால், ஆன்மிக அரசியல் என்பது  எங்களுக்கு நெருக்கம் என்று பா.ஜ.க. சொல்வதினால், பா.ஜ.க.வின் மாயமானாக இருந்துவிடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருடையது.


- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner