எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஜன.11 23 ஆண்டு களுக்கு பிறகு புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத் துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்கத் திற்கு பிறகு, புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.50, ரூ.10 என புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி புதிய வடிவில் பல்வேறு வண்ணங்களில் அச்சடித்திருந்தது.

இந்த நிலையில்,  தற்போது, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக் கத்துக்கு வந்துள்ளன. பழைய வடிவமைப்பையே புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் ஒத்திருந் தாலும், அடர் இளஞ்சிவப்பு பச்சை வண்ணத்தில் இருக்கின்றன.

10 ரூபாய் நோட்டு மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும். அதில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கை யெழுத்தும் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை இந்திய அரசே நேரடியாக வெளி யிடும். அதில், மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம் பெற்றிருக்கும்.

அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செய லாளர் சக்திகாந்த் தாசின் கையெ ழுத்து இடம்பெற்றுள்ளது. நோட் டின் வலது பக்க அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், நோட்டின் பின்புறத்தில் அச்சான ஆண்டு (2017) வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994ஆம் ஆண் டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வந்தன. படிப்படியாக பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த புதிய ஒரு ரூபாய் நோட் டுகள் சென்னை உள்பட தமிழ கத்தின் அனைத்து பகுதிகளிலும் புழக்கத்துக்கு வந்துள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner