எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஜன. 12- போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் வியா ழக்கிழமை இரவு அறிவித்தனர். இத னால் வெள்ளிக்கிழமை (ஜன. 12) முதல் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்து கடந்த 4-ஆம் தேதி தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட வில்லை என தொமுச, சி.அய்.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட் டின. இதனால், அந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பயணி கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, எத்தகைய முடிவினை எடுப்பது என் பது குறித்து தொமுச, சி.அய்.டி.யு., ஏ. அய்.டி.யு.சி., உள்ளிட்ட போக்குவரத் துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் வியாழக்கிழமை இரவு 8 மணி யில் இருந்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவது

என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் தொழிலாளர்கள் பணிக்குச் செல் வார்கள் எனவும், கடந்த 8 நாள்களாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற் பட்டுள்ளதாகவும் பணியாளர்கள் கருத் துத் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பல்லவன் இல்லத்தில் சி.அய்.டி.யு., தலைவர் அ.சவுந்தரராஜன் பேசுகையில், தமிழக அரசு நிர்ணயித் துள்ள ஊதிய உயர்வான 2.44 மடங்கு அளவு இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிடும். அந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் இருந்து ஒரு மாதத்துக்குள் அவர் அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில், நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். எனவே, வெள்ளிக் கிழமை காலை முதல் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு பணிக்குத் திரும்புகிறோம் என்றார்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சம ரசப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணும் நடுவராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழு வதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்குத் தடை விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டது. இத்தடையை நீக்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதி மன்றம் தடையை நீக்க மறுத்ததோடு, வழக்கை போக்குவரத்து தொழிலா ளர்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம். கோவிந்தராஜ் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் வியாழக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது தொழிற்சங்கங்கள் சார்பில் தாக் கல் செய்யப்பட்ட மனுவில், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்குவது குறித்து மனசாட்சியுடன் நல்ல முடிவை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சம ரசப் பேச்சுவார்த்தை நடத்த அரசு சம் மதிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக் காலத்திலேயே போராட்ட காலத்துக் கான ஊதியம் வழங்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்கு வரத்துத் தொழிலாளர்கள் மீது எடுக்கப் பட்ட குற்ற வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வருங்காலத்தில் தொழிலா ளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகைகளை சம்பந்தப்பட்ட கணக்கு களில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றால், வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாகத் தெரி விக்கப்பட்டிருந்தது. அப்போது, அரசுத் தரப்பில் நடுவரை நியமித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரி விக்கப்பட்டது. குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த பிரச்சினையில் சுமுகத் தீர்வை எட்ட ஓய்வுபெற்ற நீதிபதி இ. பத்மநாபனை நடுவராக நியமிக்கிறோம். அவர் அறி விப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். 0.13 காரணி ஊதிய உயர்வு முரண்பாடு குறித்தும், ஊதிய உயர்வு அமலாகும் தேதியையும் அவர் முடிவு செய்வார். எனவே, பொங்கலை முன்னிட்டு, தொழிலாளர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு உடனடி யாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டனர். போராட்டம் தொடர்பான வழக்கு விசா ரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner