எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப்.9 தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை பொதுமக்கள், மாண வர்கள் இன்று(9.2.2018)முதல் பார்வையிடலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பு:

பொதுமக்கள் மற்றும் மாண வர்களை ஊக்கப் படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகையை பார்வையிட அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 9ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம்.

பிப்ரவரி மாதம் முழுவதும் ஆளுநர் மாளிகையைப் பார்வையிடலாம்.

பேட்டரியால் இயங்கும் வாகனத்தின் மூலம் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவர். பதவியேற்பு விழாக்கள் நடை பெறும் தர்பார் அரங்கம், குடியரசுத் தலைவர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை, மான்கள் நடமாடும் புல்வெளி, தமிழக ஆளுநரின் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பிர தான கட்டடம், போலோ விளை யாட்டு மைதானம் ஆகிய இடங் களைப் பொதுமக்கள் பார்வையிடலாம். சுற்றுச்சூழலைப் பாது காக்கும் வகையில் பேட்டரி யால் இயங்கும் வாகனங்களின் மூலம் பொதுமக்கள் ராஜ்பவனை ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவு செய்ய  இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner