எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மதுரை, பிப்.9 மதுரை தமிழ்ச் சங்கத்தில் ரூ. 6 கோடியில் “உலகத் தமிழ்ச் சங்க நூலகம்‘ அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் நூல்கள் கொண்ட நூலகம், குழந் தைகளுக்கான பிரிவு, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மய்யம் போன்ற பல்வேறு பிரிவுகள் இடம் பெறவுள்ளன.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மாண வர்கள் கல்வியில் சிறந்து விளங் கவும் தமிழ்க் கலாச்சாரம், விஞ்ஞானம் உள்பட பல்வேறு விஷ யங்களைக் கற்றுக் கொள்ளவும் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று தென் தமிழகத்திலும் ஒரு நூலகம் தேவை என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து தமிழக சட்டப் பேரவையில் 2017--2018-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மதுரையில் உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய ஒரு நூலகம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கான அரசா ணையை தமிழ் வளர்ச்சித்துறை செயலர் இரா.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பொதுநூலகத் துறை சார்பில் ரூ.6 கோடி செலவில் நூலகம் அமைக்கப் படவுள்ளது. உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தின் முதல் தளத் தில் பொது நூலகம், நூலக இருப்பு அறை 1,2; சுய நூல் வாசிப்புப் பிரிவு, சிறுவர் நூலகம், பொறுப்பாளர் அறை, ஒளிப்பட படியெடுப்பு (“ரிப்ரோ கிராபிக்‘) பிரிவு, நூலகர் அறை 1, நூலக அலுவலகம், ஆவண அறை, குடிமைப் பணி பிரிவு, எண்மிய (“டிஜிட்டல்’) நூலகம் என மொத்தம் ஆயிரத்து 305 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நூல கம் அமைக்கப்படும். “உலகத் தமிழ்ச் சங்கநூலகம்‘ என்ற பெய ரில் இது செயல்படும். நூலகத் துக்கு நூல்கள் வாங்குதல், வழங் குதல், பராமரித்தல் போன்ற பணிகளை பொதுநூலகத்துறை மேற்கொள்ளும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner