எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப்.13  அரசு இ -சேவை மய்யங்களில் பிளாஸ் டிக் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப் படும் அரசு இ- சேவை மய்யங் களில் அசல் நிரந்தர ஆதார் அட்டைக்கு மாற்றாக பிளாஸ் டிக் ஆதார் அட்டை ரூ.30 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணை யம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை பிப்ர வரி 6-ஆம் தேதி முதல் தடை செய்துள்ளது.

எனவே, அரசு இ-சேவை மய்யங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப் படுகிறது.
மேலும், இம்மய்யங்கள் பொதுமக்களின் ஆதார் அட் டையின் நகலை முழு தாளில் ரூ.12-க்கு அச்சிட்டு வழங்கி வருகிறது. இச்சேவை தொட ரும் என்று அதில் கூறப்பட் டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner