எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிறீவில்லிப்புத்தூர், அருள்மிகு கலசலிங்கம் மருந்தியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இணைந்து 28.02.2018 அன்று நடத்திய அகில இந்திய மருந்தியல் ஆய்வுக் கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர்  ச. சகிலா பானு மற்றும் முதுநிலை மருந்தியல் மாணவர்கள் மு. நாகூர் மீரான், ஆர். கிருஷ்ணவேணி ஆகியோர்  கலந்து கொண்டு மருந்தியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை (றிஷீstமீக்ஷீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) சமர்ப்பித்தனர். இதில் பேராசிரியர்  ச. சகிலா பானு அவர்கள் முதல் பரிசாக பாராட்டுச் சான்றிதழும், வெற்றிக் கேடயமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இக்கருத்தரங்கில் மேலும் நான்கு முதுநிலை மருந்தியல் மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner