எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வல்லம், மார்ச் 8 பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற செஞ்சுருள் சங்க மாணவர்கள் கருத்தரங்கு செஞ்சுருள் சங்கம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டுச் சங்கம், சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்திய  றிமீமீக்ஷீ ணிபீஉநீணீத்ஷீக்ஷீஸ் என்ற தலைப்பில் செஞ்சுருள் சங்க அனைத்து பாலி டெக்னிக் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் 24.01.2018 காலை 9.30 மணியளவில் துவங்கியது.

விழாவை துவக்கி வைத்து உரையாற்றிய இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, வருங்கால இந்தியாவின் தூண் களாக விளங்கப் போகும் இளைஞர் சமுதாயத்திடம் மண்டிக்கிடக்கும் அறியாமையை நீக்க வேண்டும் என்று கூறிய அவர் உடலியல் சம்பந்தப்பட்ட பல்வேறு சந்தேகங்களைக் கொண்டிருக்கும் இளைஞர் களிடம் உடற்கூறு கல்வி மற்றும் குருதிக் கொடை ஆகிய வற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும் என்று குறிப்பிட்டார்.

தஞ்சாவூர் மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர் டாக்டர் கே.பபதீஸ்வரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்க்கை கொண்டாட்டம் என்ற தலைப் பில் கருத்துரை வழங்கினார்.

இன்றைய சமுதாயம் இளைஞர்களுக்கு பாலியியல் பற்றிய விழிப்புணர்வு இல் லாததால் தவறான பாதையில் சென்று தங்கள் உடல்நலத்தை மட்டுமல்லாது தங்களின் நற் பெயரையும் கெடுத்துக் கொள் கிறார்கள் என்று கூறிய அவர் மாணவர்கள் எய்ட்ஸ் மற்றும் இரத்ததானம் பற்றியும் அறிந்து சேவை மனப்பான்மையுடன் குருதிக்கொடை  செய்ய முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் எய்ட்ஸ் நோயாளி களை வெறுத்து ஒதுக்காமல் அவர்களிடம் அன்பாகவும், ஆறுதலாகவும் பழக வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உண் டாக்க மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய எய்ட்ஸ் பாதித்த  ஆர்.அண்ணா துரை, எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் எவ் வாறு எய்ட்ஸ் நோய்க்கு ஆளா னார் என்பதையும் விளக்க மாகவும் மாணவர் புரிந்து கொள் ளும் விதத்தில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய எஸ்.வேதிபிரபு, மிசிஜிசி சிஷீஉஸீநீமீறீறீஷீக்ஷீ எய்ட்ஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் இளைஞர்கள் அனைவருக்கும் எச்.அய்.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறிய அவர் இந்த நிகழ்ச்சி வாயிலாக மாணவர்கள் பெற்ற கருத்துகள சமுதாயத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பகல் உணவு இடை வேளைக் குப் பின் நடந்த நிகழ்ச்சியில் குருதிக்கொடை பற்றிய விழிப் புணர்வு நிகழ்ச்சியில் உரை யாற்றிய தஞ்சை மருத்துவக் கல்லூரி ஙிறீஷீஷீபீ ஙிணீஸீளீ சிஷீஉஸீநீமீறீறீஷீக்ஷீ கே.கண்ணன் அவர்கள் குருதிக் கொடை ஒவ்வொரு மாணவரும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கொடுக்க வேண்டும் என்று அறி வுறுத்தினார்.

அதன்பின் நடைபெற்ற கலந் துரையாடல் நிகழ்ச்சியில் மாண வர்களின் கேள்விகளுக்கு விடை யளித்தார். மாணவ, மாணவி களுக்கு எய்ட்ஸ் பற்றிய தலைப் பில் ஓவியப் போட்டி நடத்தப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner