எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 8 பெரியார் சிலை குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்த கருத்து தமிழகத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. நாடா£ளுமன்ற மாநிலங்களவை யில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இது தொடர்பாக அரசின் கவ னத்தை ஈர்த்துப் பேசினார்.

இது குறித்து அவர் கூறிய தாவது:-

எச்.ராஜா தெரிவித்தகருத்து கள் கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கோர வேண்டும். அவரின் கருத்து பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை காட் டுவதாக இருக்கிறது. தமிழகம் பெரியார் பூமி. பெரியாரின் சிந்தனைகளை அவர்களால் மாற்ற முடியாது. எச்.ராஜாவை அவரது கட்சியினர் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற கருத்து தெரிவித்தற்காக தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம்எப்போதும்அமை தியான பூமி. இங்கு அமை தியை சீர்குலைத்த எச்.ராஜா மீது நடவடிக்கை அவசியம். தொடர்ந்து இதுபோன்ற கருத் துகளை தான் அவர் தெரிவித்து வருகிறார். இதை இனியும் தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இனியும் இது போன்ற பேச்சுகளை அவர் தவிர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.