எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காத்மாண்டு, மார்ச் 13 நேபாளத் தலைநகர் காத்மாண்டு வில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் திங்கள் கிழமை தரையிறங்கிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் 50 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில் இருந்து இயக்கப்பட்ட அந்த விமானத்தில் 71 பேர் பயணித்தனர். விபத்துக் குள்ளானவுடன் விமானம் முழு வதும் தீப்பிடித்து எரிந்தததால், அதில் இருந்தவர்கள் வெளியே தப்பிச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தக் கோர விபத்து நேர்ந்திருக்கலாம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக் கின்றன. விமானியின் கவனக் குறைவு கூட அதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படு கிறது. இதையடுத்து, இதுதொடர் பான விரிவான விசாரணைக்கு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.

‘பாம்பர்டையர் க்யூ 400’ ரக பயணிகள் விமானம் ஒன்று வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து காத்மாண்டு நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பயணிகளும், ஊழி யர்கள் 4 பேரும் இருந்தனர். அவர்களில் 33 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. அவர் களுடன் சீனா மற்றும் மாலத் தீவுகளைச் சேர்ந்த 2 பயணிகளும் விமானத்தில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானமானது பிற் பகல் 2.20 மணிக்கு காத் மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. திரிபுவன் விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் அதனைத் தரையிறக்க அனுமதி யளிக்கப் பட்டிருந்ததாகத் தெரி கிறது. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள ஓடுபாதையில் அந்த விமானம் இறங்கியது. அப்போது திடீரென கட்டுப் பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் அமைந் துள்ள கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. அதிவேக மாக அந்த விமானம் சென்றதால் அதன் முன்பகுதி முழுவதும் தரையில் மோதி சேதமடைந்தது. அதன் தொடர்ச்சி யாக விமானத் தில் தீப்பிடித்தது. இதன் காரண மாக அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாகக் காட்சி யளித்தது.

தகவலறிந்த விமான நிலைய ஊழியர்களும், விபத்து மேலாண் மைக் குழுவினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர், விமானத் தில் சிக்கியிருந்தவர்களை மீட் கும் பணிகளை அவர்கள் மேற் கொண்டனர்.

முதல்கட்டமாக 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விமானத்துக்குள் இருந்து 31 சடலங்கள் மீட்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் விமா னத்துக்குள் சிக்கியிருப்பதாகவும், அவற்றை மீட்கும் நடவடிக் கைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள தாகவும் நேபாளப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இதுகுறித்து, அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் சஞ்சீவ் கவுதம் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:

அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக வேறு இடத்தில் சம் பந்தப்பட்ட விமானம் தரையிறங் கியது. அப்போது அது கட்டுப் பாட்டை இழந்து ஓடு பாதையில் இருந்து விலகியது. அதன் தொடர்ச்சியாகவே விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் குறைந்தது 50 பேராவது இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத் துக்குக் காரணம் என்ன என்பதை இதுவரை தெளிவாகக் கண்டறிய இயலவில்லை. மீட் புப் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தைத் தொ டர்ந்து திரிபுவன் விமான நிலை யத்துக்குள் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner